வீட்டில் இருந்தபடியே ஒரு எளிய பயிற்சியை மேற்கொண்டால் தொடைப்பகுதியில் உள்ள அதிகப்படியான சதையினை குறைக்கலாம்.
முதலில் விரிப்பில் கால்களை சேர்த்து வைத்து நேராக நின்று, கைகளை மேல் நோக்கி தூக்கியபடி கும்பிட்ட நிலையில் முன்புறமாக சற்று குனிந்து கால் முட்டியை சற்று மடக்க வேண்டும். கால் பாத முன்விரல்களில் உங்கள் எடை முழுவதும் இருக்கும்படி சற்று குனிந்த நிலையில் நிற்க வேண்டும். 20 விநாடிகள் அப்படியே நின்று பழைய நிலைக்கு வர வேண்டும். தினமும் 20 நிமிடம் என ஒரு மாதம் வரை தொடர்ந்து செய்தால், சதையில் அளவு குறைந்திருப்பதை காணலாம்.