நம்மில் பெரும்பாலானோருக்கு உள்ள பழக்கத்தில் ஓன்று அடிக்கடி முகம் கழுவுவது. அடிக்கடி முகம் கழுவுவது நல்லதா? அதனால் ஏதேனும் பிரச்சனைகள் வருமா? வாங்க பாக்கலாம்.
அடிக்கடி முகம் கழுவுவதனால் முகம் வறட்சியடைகின்றது.
அத்துடன் முகத்தில் தோல் சுருக்கமும் விரைவில் ஏற்படும் வாய்ப்புக்கள்
உள்ளன.
வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியதும் நாம் அனைவரும் சோப்பு அல்லது பேஷ் வாஷ் போடு முகம் கழுவுவது உண்டு. அவ்வாறு செய்துவந்தால் உடனே அந்த பழக்கத்தை கைவிடுங்கள். வெயில் பட்ட சருமத்திற்கு கடலை மா அல்லது பயிற்றம் மா போட்டு முகம் கழுவது பாதுகாப்பானதும் முகம் கறுக்காமலும் வறட்சியடையாமலும் இருக்கும்.
முகத்திற்கு சோப்பு பயன்படுவது நல்லதல்ல. முடிந்தவரை பேஷ் வாஷ் அல்லது இயற்கையான பொருட்களை கொண்டு முகம் கழுவுங்கள். ஒரு நாளைக்கு நான்கு தடவைகளுக்கு மேல் முகம் கழுவுவதை தவிர்ப்பதே
சிறந்தது.