36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சரும நிறத்தில் மாற்றம் ஏற்படாமல் பாதுகாக்க…

காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்வது பலருக்கும் முடியாத காரியமாகவே உள்ளது. ஆனால் காலையில் எழுந்து சருமத்தை பாதுகாக்கும் முறைகளை தொடர்ச்சியாக செய்து வந்தால் சருமத்தை இளமையாக வைத்திருக்க முடியும்.

அதிகாலையில் எழுந்து கொள்வதனால் நமக்கு அதிகமான புத்துணர்ச்சி கிடைக்கும். இதனால் சரும அழகு அதிகமாவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. சருமத்தைப் அழகுபடுத்துவதற்கு அடிக்கடி பார்லருக்குச் சென்று அதிகளவான பணத்தை விரயம் செய்வதற்குப் பதிலாக வீட்டிலேயே தொடர்ச்சியாக தினமும் சிலவற்றை செய்வதனால் சரும அழகு மேலும் அதிகரிப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

1. முகம் கழுவுதல்.
காலையில் எழுந்தவுடன் முகம் கழுவுவது மிகவும் அவசியமானது. இதனால் தூங்கும் போது சருமத்தில் படிந்த அழுக்குகளை நீக்கி விட முடியும். அத்துடன் நைட் கிறீம் பயன்படுத்துவதனால் அதனை காலையில் அகற்றுவது அவசியமானது. காலையில் பயன்படுத்தும் போது ஜெல் மற்றும் நுரை வடிவில் உள்ள கிளன்சர்களைப் பயன்படுத்துவது அவசியமானது. மாலையில் எண்ணெய்த் தன்மை கொண்ட கிளன்சர்களைப் பயன்படுத்துவது அவசியமானது.

2. டோனர்.
பலரும் டோனர் பயன்படுத்துவது அவசியமற்றதாகவே கருதுகின்றனர். ஆனால் அது சருமப் பாதுகாப்பில் மிகவும் முக்கியமானது. இதனைப் பயன்படுத்துவதனால் சருமத்தின் துளைகளை மூடச் செய்வதுடன் pHஜ சமநிலையாகப் பேணவும் செய்யும்.

டோடனரைப் பயன்படுத்துவதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த கலங்களை நீக்கி சருமத்தை சுத்தமாகப் பேண முடியும். நீங்கள் டோனரைப் பயன்படுத்தாமல் மொய்ஸ்டரைசர் பயன்படுத்தினால் அழுக்குகள் படிந்து பருக்களை ஏற்படுத்தும்.

3. மொய்ஸ்டரைசர்.
பகலில் மென்மையான ஜெல் வடிவில் உள்ள மொய்ஸ்டரைசர் பயன்படுத்துவது அவசியமானது. இதனால் பகலில் அதிகளவில் வேர்ப்பதில் இருந்து பாதுகாத்து பகலில் பயன்படுத்தும் கிறீமை இலகுவாக சருமத்தில் நிலைத்து நிற்கச் செய்யும்.

4. கண்ணிற்கான கிறீம்.
கண்ணிற்கான கிறீமை பகலில் பயன்படுத்துவதனால் கண்ணை ஈரலிப்பாக வைத்திருப்பதுடன் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதிப்படையாமல் பாதுகாக்கும்.

5. SPF பொருட்கள்.
SPF கிறீம்களை பகலில் பயன்படுத்துவது மிகவும் அவசியமானது. சன் கிறீம் பயன்படுத்துவதனால் UV கதிர்களின் பாதிப்பிலிருந்து இருந்து சருமத்தைப் பாதுகாக்க முடியும். இதனால் சரும நிறத்தில் மாற்றம் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

6. ஸ்கிறப்.
ஸ்கிறப் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த கலங்களை நீக்கி சருமப் பொலிவைப் பேண முடியும். சருமத்தை வாரத்திற்கு ஒரு தடவையாவது ஸ்கிறப் செய்வது போதுமானது.

Related posts

வேகமாக பகிருங்கள் !அசிங்கமான தேமலை போக்கும் நாட்டு வைத்தியம் இதுதான்!!!

nathan

சருமத்தை பளபளப்பாக்கும் முட்டைக்கோஸ் பேஷியல்

nathan

உடல் துர்நாற்றத்தை போக்க எளிய இயற்கை வழிகள்!

nathan

ட்ரை பண்ணி பாருங்க ! இதோ இயற்கையான மாதுளை “FACE PACK”

nathan

சமையலறையில் மறைந்துள்ள சில பாரம்பரிய அழகு பராமரிப்புப் பொருட்கள்!

nathan

மனம் திறந்த விக்கி! ரெண்டு புள்ளைக்கு அப்பான்னு என்னாலே நம்ப முடியல

nathan

இதை முகத்தில் ‘மாஸ்க்’ போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால் முகம் இளமையாக மாறும்…..

sangika

கை கருப்பாக உள்ளதா?

nathan

வாழைப்பழத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? இதை முயன்று பாருங்கள்!…

sangika