கற்றாழையில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சோற்று கற்றாழை சிறந்த ஒன்றாகும். கூந்தல் வளர்ப்பில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழை சோற்றை வைத்து கட்டி, இரவு தூங்கினால் வேதனை குறைந்து, மூன்று தினங்களில் நோய் தீரும்.
சோற்று கற்றாழையின் சோற்றுப்பகுதியை அரை கிலோவும், ஒரு கிலோ நல்லெண்ணெய் சேர்த்து, கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து, வடிகட்டி அதனை குளியலுக்கு பயன்படுத்தினால் குளிர்ச்சி உண்டாகும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகளால் உலர்ந்த சருமம் போன்றவற்றில் கற்றாழை சாற்றை தினமும் தடவி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். தீக்காயங்களுக்கும் இது சிறந்த ஒன்றாக செயல்படுகிறது.