25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
tmbhhhj
ஆரோக்கிய உணவு

உங்களுக்குதான் இந்த விஷயம்..இடுப்புச் சதை குறையனும்னா, கண்ணை மூடிட்டு கண்டிப்பா இந்த 7 உணவு வகைகளுக்கு நோ சொல்லனும்!

நம்மில் பலருக்கும் ஃபிளாட்டான வயிறு வேண்டும் என்ற ஆசை இருக்கும். இடுப்பைச் சுற்றி டன்லப் டயர்களை மாட்டிக் கொண்டு அலைந்தாற் போன்று நீடித்த தொந்தியும், தொப்பையுமாக இருக்க யாருக்குத்தான் பிடித்திருக்கிறது?! ஒருவகையில் குண்டாக இருப்பவர்கள் அனைவருக்குமே இது வாழ்நாள் கனவாக இருக்கலாம்.

சிலர் எப்படியாவது ஜிம், வொர்க் அவுட், டயட், யோகா, உடற்பயிற்சி, ஜூம்பா நடனம் என பாடாய்ப்பட்டு கருமமே கண்ணாக இருந்து இளைத்தும் விடுகிறார்கள். அதாவது சிலரால் மட்டுமே அப்படி இளைக்க முடிகிறது! ஆனால் பலருக்கும் இந்த ஃப்ளாட் டம்மி அட… அதாங்க தொப்பை இல்லாத வயிறு என்பது வாழ்நாள் முழுமைக்கும் நிறைவேறாத கனவாகவே நீடித்து விடுகிறது. அவர்கள் வேறென்ன செய்து தொப்பையைக் குறைக்கலாம் என்று நாளும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இந்த டிப்ஸ் ஓரளவு உபயோகமாக இருக்கலாம்.

கீழே பட்டியலிடப்பட்டுள்ள உணவுப் பொருட்களை எல்லாம் தொப்பை இருப்பவர்கள் மட்டுமல்ல கடும் பிரயத்தனப்பட்டு ஃபிளாட் டம்மி என்ற இலக்கை எட்டியவர்களும் கூட அதே நிலை நீடிக்க வேண்டுமென்றால் இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டால் நல்லது.

மாட்டிறைச்சி…

சிவப்பு இறைச்சி என்று சொல்லப்படக் கூடிய ஆடு மற்றும் மாட்டிறைச்சி வகையறாக்களில் விட்டமின்களும், மினரல்களும் அதிகமிருக்கும். அதுமட்டுமல்ல அவற்றில் பிரதான சத்தாக புரதம் பெரும்பங்கு வகிக்கும். வயிறு ஃபிளாட்டாக இருக்க வேண்டும் எனக் கடும் முயற்சி எடுத்து வயிற்றுச் சதையைக் குறைத்தவர்கள் இவ்வகை இறைச்சிகளை உண்டால் மீண்டும் உடல் எடை அதிகரிப்பதோடு, உடலில் கொழுப்புச் சத்தும் கூடும். இறைச்சியில் உள்ள சோடியம் மற்றும் பதப்படுத்தலுக்குச் சேர்க்கப்பட்ட பொருட்களால் இடுப்பைச் சுற்று மீண்டும் சதை மிகுந்து தொப்பை வரக் காரணமாகி விடும். எனவே தொப்பையை வெறுப்பவர்கள் மிதமிஞ்சிய இறைச்சியையும் தவிர்த்து விடுங்கள்.

இயல்பாகவே மாட்டிறைச்சியில் கொழுப்பு அதிகமிருக்கும். செரிப்பதற்கு நேரமாகும். அதனால் அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேகரிக்கப்பட்டு எடை அதிகரிப்பால் இழந்த தொப்பையை மீண்டும் பெற்றுக் கொண்டது போலாகி விடும்.

அதற்காக மாட்டிறைச்சியே உண்ணக் கூடாது என்பதில்லை. உண்ணலாம். ஆசைக்கு சிறு, சிறு துண்டுகளாக உண்ணப் பழகலாம். அதிகமாக உண்டால் தான் ஆபத்தே!

மக்காச்சோளம்…

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி, அதற்கேற்ப எதை உண்பதாக இருந்தாலும் அளவுடனே உண்ண வேண்டும். ருசியாக இருக்கிறதே என்று நிறைய சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் பிறகு அதுவே ஒரு பழக்கமாகி உடல் எடை கூடுவதற்கான காரணங்களில் மிக முக்கியமானதாகி விடும். சிலருக்கு மக்காச்சோளம் சாப்பிடப் பிடிக்கும். சுவையாக இருப்பதால் மட்டுமல்ல, அதை அதிகமாக உண்டாலும் கூட வயிறு நிறைந்தாற் போலான உணர்வு ஏற்படுவதில்லை என்பதாலும் தான். ஆனால், சோளத்தில் நிறைந்திருப்பது முழுதுமே சர்க்கரையும், ஆற்றலும் தான். சோளத்தில் நிறைந்திருக்கும் ஃப்ரக்டோஸ் எனும் சர்க்கரை உடல் உள்ளுறுப்புகளில் கொழுப்பு படிவதற்கும், தேங்குவதற்கும் மிக முக்கியமான காரணியாகி விடுகிறது. இதனால் உடல் எடை கூடுவதோடு கல்லீரலைச் சுற்று கொழுப்பு படிவதற்கும் காரணமாகி விடுகிறது. சோள உணவுகளால் உடல் எடை அதிகமாவதைத் தடுக்க வேண்டுமெனில் பிறகு மீண்டும் டயட் என்றும் உடற்பயிற்சி என்றும் போராடியாக வேண்டும். இது தேவையா?!
tmbhhhj
சோளம் அல்லது கார்ன் சாப்பிடுவதென்றால் அளவாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடலாம். தினமும் கார்ன் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமெனில் புரத உணவு அல்லது கொழுப்பு சார்ந்த உணவுகளுடன் எடுத்துக் கொண்டால் வயிற்றுப் பகுதியில் சதை போடுவதைத் தவிர்க்கலாம்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை…

சர்க்கரை முழுக்க முழுக்க மாவுச்சத்தும் சத்துக்களற்ற ஆற்றலும் மட்டுமே கொண்டது. அதில் உடல் ஆரோக்யத்துக்குத் தேவையான எவ்விதமான சத்துக்களும் இல்லை. குழந்தைகள் எழுச்சியுடன் இயங்கா விட்டால் ஆற்றல் கிடைப்பதற்காக மட்டுமே அவர்கள் அருந்தும் பானங்களில் அல்லது உணவுகளில் சர்க்கரை சேர்க்க வேண்டும். தற்போது சந்தையில் சரளமாகக் கிடைக்கும் குளிர்பானங்கள் மற்றும் எனர்ஜி பானங்களில் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் சர்க்கரை மூலப்பொருளே அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அவற்றை அருந்துவதால் உடல் எடை அதிகரிப்பதோடு ஒபிஸிட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான உடல்நலக் கோளாறுகளும் வரக்கூடும். எனவே எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் ஸ்னாக்ஸ் வகையறாக்களை சாப்பிடுவதைத் தவிர்த்து விடுவது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்…

Related posts

உங்களுக்கு தெரியுமா சிறுநீரக கற்களை தடுக்கும் வாழைத்தண்டு துவையல்

nathan

சூப்பரான பொட்டுக்கடலை உருண்டை எப்படி செய்வது தெரியுமா?

nathan

புளிச்சகீரையின் மருத்துவ குணங்கள்

nathan

முட்டை கெட்டுவிட்டதா? இல்லையா? என கண்டுபிடிக்கும் வழிமுறைகள் !!!

nathan

இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…

nathan

வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் எள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

தெரிஞ்சிக்கங்க… கரும்பு சாப்பிடுவதால் நம் உடலுக்குள் இவ்வளவு மாற்றம் ஏற்படுமா?

nathan

இந்த கீரையின் தொக்கை சாப்பிட்டால் போதும்… நோய்கள் பறந்துபோகுமாம்…!

nathan

கவணம் உணவு சாப்பிட்டதும் நீங்கள் தப்பியும் இந்த 7 தவறுகளை செஞ்சுடாதீங்க!!

nathan