25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
88c3454ed10001d0a22c3b0455
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா? நல்லெண்ணெய்யில் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்….!

ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணலாம். ஆயில் புல்லிங் என்பது வேறொன்றும் இல்லை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை ஊற்றி 10 நிமிடம் கொப்பளிக்க வேண்டும், அவ்வளவு தான்.

சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு, அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தண்ணீர் இரண்டு டம்ளர் அளவு குடிக்க வேண்டும். பிறகு ஆயில் புல்லிங் செய்வது நல்லது.

ஆயில் புல்லிங் செய்வதால் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழும் நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.

ஆயில் புல்லிங் செய்வதன் மூலம், மூட்டு வலி, முழங்கல் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத் தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற நோய்கள் குறைந்து விடுகிறது என்கின்றனர்.
88c3454ed10001d0a22c3b0455
இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு நோயின் தன்மை சற்று அதிகரித்து, பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான சுகாதாரமன உணவுகளை உட்கொண்டு நல்ல முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம் முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு வாழலாம்.

வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகளுக்கு தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்கள் கறைகள் நீங்கி, பற்கள் வெள்ளையாகவும், ஆரோக்கியமனதாகவும் காணப்படும். தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நார்றம் அடிக்காமல் இருக்கும்.

ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும். பல் கூச்சம் நின்று பல்வலி மறையும்.

ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும். ஒற்றை தலைவலியால் அவஸ்தைப் படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.

Related posts

வாதம் போக்கும், சூடு தணிக்கும்… கோரை, ஈச்சம் பாய் நல்லது!

nathan

சூப்பர் டிப்ஸ் அவஸ்தை தரும் இருமல், சளி வராமல் தடுக்கும் முறைகள்.!

nathan

உங்க மனைவி என்ன ராசி? இந்த ராசிக்கார பெண்கள் அந்த விசியத்தில் காட்டு தீ போல செயல்படுவார்களாம்…

nathan

குழந்தைக்கு தாய்ப்பால் பிடிக்காமல் போக அம்மா செய்யும் இந்த விஷயங்கள்தான் காரணம்…

nathan

சூப்பர் ஐடியா.! அழுகிய முட்டையை கண்டறிய..

nathan

தெரிந்துகொள்வோமா? பெண்களை பற்றி ஆண்களால் புரிந்துக்கொள்ள முடியாத விஷயங்கள்…

nathan

தினமும் காலையில இத குடிங்க… நீங்க ஃபிட்டா இருக்க ஆசைப்படுறீங்களா?

nathan

வயிற்றுக் கொழுப்பைக் கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்!!! தெரிஞ்சிக்கங்க…

nathan

எப்போதும் கவலைப்படுகிறீர்களா? சிறப்பான தீர்வு!…

nathan