23.2 C
Chennai
Thursday, Jan 29, 2026
gf
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா பெண்களின் மாதவிடாய் வலியை குணப்படுத்தும் வாழைப்பூ..!!

உடலுக்கு பல நன்மைகளை அளிப்பதில் வாழைப்பூ இடம்பெற்றுள்ளது. வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.

நமது உணவில் காய்கறிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்திய உணவு வகைகளில் எப்போதுமே காய்கறிகள் ஒரு பகுதியாவது இடம்பெறுகின்றன. பெரும்பாலும் நமது உணவில் ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கள் இடம்பெறுகின்றன. காய்கள் சேர்ந்த உணவுக் கலவை அல்லது தொட்டுக்கொள்ளும் ஒரு உணவாக காய்கறி இடம்பெறுகிறது.

சில காய்கறிகள் பொதுவாக நமது உணவில் வழக்கமாக தினசரி இடம் பெறுகின்றன. சில காய்கறிகள் பொதுவாக சமைக்கப்படுவதே கிடையாது. இருப்பினும் மற்ற காய்கறிகளான கேரட், முட்டை கோஸ், பீட்ரூட், பாகற்காய் உள்ளிட்ட காய்களைப் போல இது பயன்படுத்தப் படுவதில்லை.

ஆயுர்வேத மருத்துவத்தில் பல காய்கறிகள் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், அவற்றில் முதன்மையானதாக வாழைப்பூ முக்கிய இடம் பிடித்துள்ளது. இதில் உள்ள நன்மை தரும் விஷயங்களால் இதை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.gf

வாழைப்பூவில் அதிக காரம் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிடுவது மிகவும் பயனளிக்கக் கூடியது. வாழைப்பூ சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். ஆயுர்வேதத்தில் இது உடலில் பித்தத்தைத் தணிக்கும் குணம் கொண்டதாக கூறப்படுகிறது.

இதை உரிய வகையில் சமைத்து சாப்பிடும்போது வெப்பத்தால் ஏற்படும் பலவித நோய்களை – அதாவது, சிறுநீரகம் சார்ந்த நோய்கள், குடல் புண், இரைப்பை புண், பெண்களுக்கு வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள், உள்ளிட்ட வற்றைக் குணப்படுத்த உதவுகிறது.

வெள்ளைப்படிதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

Related posts

அலட்சியம் வேண்டாம்…. உயிரை பறிக்கும் இன்ஸ்டன்ட் உணவுகள்? சாப்பிட்டதும் விஷமாகும் அதிர்ச்சி!

nathan

தர்பூசணி ஜூஸில் மிளகுத்தூள் கலந்து குடிச்சு பாருங்க நன்மைகள் ஏராளமாம்!!!

nathan

இந்த ஒரு பொருள சேர்க்காததால தான் புற்றுநோய் வருதுன்னு உங்களுக்கு தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா சிறுநீரகப் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய மருத்துவம் குணம் கொண்ட மக்காச்சோளம்..!

nathan

உங்களுக்கு தெரியுமா பனஞ்சர்க்கரையில் உள்ள ஏராளமான பயன்கள்.!

nathan

உங்களுக்கு தெரியுமா நண்டு யாரெல்லாம் சாப்பிடலாம்? இவ்வளவு நன்மைகளா?

nathan

சுவையான மாப்பிள்ளை சம்பா மோர் கஞ்சி

nathan

7 நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய சூப்பர் டிப்ஸ்!

nathan

பருவ மாற்றங்களுக்கேற்ப உண்ண வேண்டிய உணவுகள்!..

sangika