23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
dgtrt
ஆரோக்கியம் குறிப்புகள்

எப்படி கொடுக்கலாம்? குழந்தைக்கு தாய்ப்பால் எத்தனை முறை கொடுக்கலாம் ?

பிறந்து புதிதாக உலகிற்கு வரும் உயிரினங்களில் மனித இனம் மட்டுமே சற்று வித்யாசமானவர்களாக இருக்கிறோம். அந்த வகையில் பிறந்து படிப்படியாக மட்டுமே வளர்ச்சியை காணும் மனித குழந்தைகளுக்கு முதல் உணவான பாலை குடிப்பதற்கும் தாய் தான்கற்றுத் தர வேண்டியுள்ளது. பிறந்த குழந்தையின் உரிமையாக இருக்கக் கூடியது தாய்ப்பாலைபுகட்டும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தாயின் கவனக்குறைவு குழந்தையின் ஆரோக்யத்திற்கு மட்டுமல்ல உயிருக்கும் ஆபத்தை விளைவிக்க கூடும்.

கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு குழந்தை தனக்கு பசிக்கிறது என்பதை பிறருக்கு உணர்த்தும் வகையில் சைகைகளின் மூலமோ அல்லதுஅரைகுறை வார்த்தைகளின் மூலமோ உணர்த்தி விடும். ஆனால் தாயின் வயிற்றில் நீண்ட நேரம் தூக்கத்தில் இருந்தபடி வளர்ந்த குழந்தை பிறந்தவுடன் தனது பசியை எவ்வாறு உணர்த்தும். இத்தகைய சூழலில் குழந்தை அழுதால் பால் கொடுக்கலாம் என அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது.

பொதுவாக குழந்தை பிறந்த 1மணி நேரத்திற்குள் தாயிடம் சுரக்கும் மஞ்சள் நிறம் கலந்த முதல் பாலைகட்டாயம் கொடுக்க வேண்டும்.
dgtrt
குழந்தைக்குஒரு நாளில் சிறிது, சிறிதாக 8 முதல் 12 முறை தாய்ப்பால் ஊட்டலாம். சில குழந்தைகளுக்கு 3லிருந்து 4 முறை பால் அருந்தினாலே போதுமானதாக இருக்கும். வலுகட்டாயமாக குழந்தைக்கு பால் கொடுக்கக் கூடாது. குழந்தையின் பசியைஅறிந்து பால் கொடுக்கவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. இந்த நேரம், இத்தனை முறை, இந்த அளவு என வரைமுறைகளை கொண்டு பட்டியலிட்டு குழந்தைக்கு பாலுட்டிட கூடாது.

பால் கொடும் முறையில் கவனம் செலுத்த வேண்டிய அடுத்த விஷயம் எந்த நிலையில் இருந்து குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும் என்பது தான். சில தாய்மார்கள் பால் கொடுக்க ஏதுவாக இருக்கிறது என எண்ணிய அல்லது தனக்கு சிறுது நேரம், ஒய்வு தேவை என கருதி படுத்த நிலையில் குழந்தைக்கு பால் கொடுப்பதுண்டு. அவ்வாறு படுத்த நிலையில் பால் கொடுக்கும் பொழுது குழந்தையும், தாயும் உறங்க கூடும்.

இதனால் எதிர்பாராத விதமாக தாய்ப்பால் குழந்தையின் மூச்சு குழாய்க்குள் இறங்கி குழந்தையின் உயிருக்கு கூட ஆபத்தை ஏற்ப்படுத்தக் கூடும். அதோடு படுத்துக்கொண்டு பால் குடிப்பதால் குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியும் ஏற்படும். ஆகையால் எப்போதும் அமர்ந்த நிலையில் மட்டுமே குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும். பால் குடிக்கும் நேரத்தில் குழந்தை தூங்குவதாக உணர்ந்தால் உடனடியாக குழந்தையை மார்பில் இருந்து விலக்கி படுக்க வைக்க வேண்டும்.

குழந்தை பால் குடித்தவுடன், தோளில் சாய்த்து பிடித்தவாறு அதன் முதுகில் மெதுவாக தட்டிக்கொடுக்க வேண்டும். குழந்தைக்கு ஏப்பம் வரும் வரை இப்படி செய்ய வேண்டும். குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு முன்பும், கொடுத்த பிறகும், மார்பகத்தை மிதமான வெந்நீரில் நனைத்த துணியால், நன்றாக துடைத்துவிட வேண்டும். அதோடு மிகுந்த வாசனை கொண்ட சோப்புகளை பயன்படுத்து மார்பகங்களை சுத்தம் செய்யக் கூடாது.

Related posts

உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…தவறான உறவில் இருக்கிறீர்களா..? 10 அறிகுறிகள் இதோ!

nathan

நாப்கின்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிற அலெர்ஜிகளை அறிந்து கொள்ளவும், அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிந்து…

nathan

உருளைக்கிழங்கால் ஆபத்துகளும் உள்ளது!

nathan

நீங்க வீட்ல மூத்தவரா? இளையவரா? சொல்லுங்க..

nathan

நல்ல நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

மிகவும் ஆபத்தாம்! இறைச்சியுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க!

nathan

இதயத்துக்கு மது நண்பனா, பகைவனா?/DOES DRINKING IS GOOD TO HEART?

nathan

பெண்கள் அறிந்து கொள்ள..பெண்களின் முன்னழகை பாதிக்கும் செயல்கள்….

nathan