வெங்காயத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு 2 வகைகள் உள்ளது. இவற்றில் சிவப்பு வெங்காயம் ஆஸ்துமா பிரச்சனையை சரிசெய்வதற்கு பயன்படுகிறது.
சிவப்பு வெங்காயம் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், விட்டமின் C, சல்பர், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இத்தகைய சிவப்பு வெங்காயம் எப்ப்டி ஆஸ்துமாவை குணப்படுத்த உதவுகின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்
- சிவப்பு வெங்காயம் – 1/2 கிலோ
- தேன் – 6-8 டேபிள் ஸ்பூன்
- நாட்டுச்சர்க்கரை – 350 கிராம்
- எலுமிச்சை – 2
- தண்ணீர் – 6 டம்ளர்
செய்முறை
- நாட்டுச்சர்க்கரை உருக வைத்து, அதில் நறுக்கிய சிவப்பு வெங்காயம், மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
- அதன் பின் இறக்கி குளிர வைத்து அதில் எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் தேன் கலந்து, ஒரு கண்ணாடி பாட்டியில் நிரப்பி வைத்துக் கொள்ளலாம்.
- ஆஸ்துமா பெரியவர்களுக்கு இருந்தால், அவர்கள் ஒவ்வொரு வேளை உணவு உட்கொள்வதற்கு முன்பும் 1 டேபிள் ஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும்.
- குழந்தைகளுக்கு ஆஸ்துமா எனில், 1 டீஸ்பூன் அளவு சாப்பிட வேண்டும். இவ்வாறு ஆஸ்துமாவின் அறிகுறிகள் போகும் வரை பின்பற்ற வேண்டும்.
சிவப்பு வெங்காயத்தின் இதர நன்மைகள்
- வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், ரத்த செல்கள் உறைவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு மற்றும் இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.
- தினமும் பச்சையாக வெங்காயத்தை வாயில் போட்டு 2 நிமிடம் மெல்லுவதன் மூலம் பல் சொத்தை மற்றும் வாயில் தொற்றுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.
- வெங்காய சாற்றில் தேன் அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து, முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் விரைவில் மறையும்.
- வெங்காயச் சாறு மற்றும் தேனை சரிசம அளவில் கலந்து குடித்து வந்தால் தொண்டைப்புண் மற்றும் இருமல் குணமாகும்.
- டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றுடன், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து, தினமும் 2 வேளை சாப்பிட்டால் பாலுணர்ச்சி தூண்டப்படும்.
- சிறுநீரக பாதையில் பிரச்சனை உள்ளவர்கள் 6-7 கிராம் வெங்காயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால், விரைவில் குணமாகும்.