ஹீமோகுளோபின் குறைவு என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று ஒரு பெரும்பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இதனால் உடல் மட்டுமல்ல மனமும் சோர்ந்து விடும். பொதுவாக இரும்புச்சத்து அதிகமுள்ள உணவை தவிர்ப்பவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
உலர் திராட்சை
இவற்றில் விட்டமின் பி, சி போலிக் ஆக்சைடு, இரும்புச்சத்து பொட்டாசியம் கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை உள்ளன. இரத்த சோகை உள்ளவர்கள் உலர் திராட்சசையை ஸ்நாக்ஸ் போன்றே அல்லது தினமும் இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கலாம். இதனால் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாகி விடுவீர்கள்.
பேரிச்சம்பழம்
பேரிச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து உடலில் இரத்த அணுக்களின் அளவு அதிகரித்து இரத்த சோகையை போக்கும். இதற்கு தினமும் 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வர வேண்டும். மேலும் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாக கிடைக்கும். அதே போன்று இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துவதால் எங்கும் கழிவுகளே நச்சுக்களோ தங்காது.தேவையற்ற கட்டிகள் நீர்க்கட்டிகள் உருவாகாது சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
மாதுளை பழம்
மாதுளைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்த 100 கிராம் பழத்தில் 0.30 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. மேலும் ஆக்சிடென்ட் ராடிகளை உறுஞ்சும் திறன் இதில் அதிகம். எனவே மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் hemoglobin அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியம் மேம்படும் .
அத்திப்பழம்
100 கிராம் அத்திப் பழத்தில் 2 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது எனவே தினமும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள குளோசிரிக் அமிலம் உடலிலுள்ள இன்சுலினை அதிகரிக்க செய்து சர்க்கரையைக் குறைக்கும். நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதில் கால்சியம் அதிகமாக உள்ளது.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் புரதம் கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே இருந்தாலும் நார்ச்சத்தும் கால்ஷியம் பொட்டாஷியம் ஆகியவை அதிகமாக உள்ளன. அதே போன்று 100 கிராம் கொய்யாவில் 210 மில்லி கிராம் விட்டமின் சி உள்ளது. இரும்புச் சத்தை கிரகிக்க வைட்டமின் சி மிகவும் அவசியம். 100 கிராம் கொய்யா 0.27 மில்லி கிராம் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலிமை பெறும். மேலும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் என்ற பிரச்சினையே வராது. இதனால் குடல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம்.
பீட்ரூட்
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட் மிகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது. இதில் இரும்பு ஃபோலிக் அமிலம் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதில் வளமையாக உள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் எனவே வாரத்திற்கு மூன்று முறை பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கீரைகள்
கீரைகளில் முருங்கைக் கீரை பசலைக் கீரை பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் இரும்பு சத்து அதிக அளவு உள்ளது. இந்த கீரைகளை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து இரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும் பல நோய்களுக்கு காரணமான மலச்சிக்கல் பிரச்சினையும் இருக்காது.