நாம் அதிகமாக சுவைத்து அறியாத பழ வகைகளில் இதுவும் ஒன்று. இப்பொழுது பரவலாக பழச் சந்தைகளில் கிடைக்கும் ஒரு பழம். பார்ப்பதற்கு இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று அழகாக இருக்கும்.
மெக்சிகோ, தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா தான் இதன் தாயகம். அவர்களின் உணவு பொருட்களில் முக்கிய இடத்தை பிடித்தது.
டிராகன் பழம் பல வித நன்மைகளை கொண்ட ஒரு பழம். உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொழுப்பு குறைப்பு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது, ஆற்றலை அதிகரிப்பது போன்றவை இதன் பயன்களாகும். மொத்தத்தில் உடலின் எல்லா செயல்களுக்கும் ஒரு முன்னேற்றத்தை கொடுக்கும் பழம் இந்த டிராகன் பழம்.
பல வித வளங்களை உடலுக்கு கொடுப்பதால் இதனை “சூப்பர் புட்” என்று அழைக்கலாம். ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கும்போதிலும் மற்ற புகழ் பெற்ற பழங்களுக்கு மத்தியில் அதிக வரவேற்பை பெறாமல் இருக்கிறது. டிராகன் பழத்தில் 3 வகை உள்ளன. சிவப்பு தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம். சிவப்பு தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம். மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம்.