25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
625.0.560.
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா தொப்பையை குறைக்க உதவும் 15 உணவுகள்

பொதுவாக நமது உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மூலம் மட்டுமே உடலின் எடை உயர்வு, தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்பட காரணமாக உள்ளது

அத்தகைய தொப்பையை குறைக்க எந்தெந்த உணவுகள் உண்டால் மற்றும் உடற்பயிற்சி செய்தால் முற்றிலுமாகத் தீர்வு காண முடியும் என்பதைப் பார்ப்போம்.
தண்ணீர்

தினமும் குறைந்தது 7 அல்லது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் உடல் வறட்சியில்லாமல் உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

625.0.560.350.160.300.053
உப்பு

உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால் உடலில் தண்ணீரானது வெளியேறாமல் அதிகமாக தங்கிவிடும்.

தேன்

தினமும் தேனை சுடு நீரில் கலந்து, காலையில் குடித்து வந்தால் தொப்பை விரைவாக குறைந்து விடும்.
பட்டை

பட்டையை உணவில் சேர்த்து வந்தால் அது அடிக்கடி பசி ஏற்படுவதை தடுத்து உடலில் தேவையில்லாத கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கும்.

நட்ஸ்

நட்ஸில் நல்ல ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்துள்ளது. மேலும் இவை தொப்பையை ஏற்படுத்தாது. எனவே இதனை அளவாக சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு ஆரோக்கியமாகத் தான் இருக்கும்.625.0.560.350.160.3
அவகேடோ

அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் உள்ளதால் இதனை சாப்பிட்டால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வயிற்றை நிறைத்து அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களை கரைக்க உதவும். அதிலும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவற்றை அவ்வப்போது சாப்பிடுவது மிகவும் நல்லது.
தயிர்

தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால் அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டச்சத்துக்களால் எடை குறைவதோடு தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

கிரீன் டீ

க்ரீன் டீயில் நல்ல அளவில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. எனவே காபி குடிப்பதற்கு பதிலாக, தினமும் க்ரீன் டீயை குடித்தால், உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்துவிடும்.
சால்மன் மீன்

சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும்.

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.625.0.560.
ப்ராக்கோலி

ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை கரைக்கும்.

எலுமிச்சை சாறு

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால் இதற்கான பலன் உடனே தெரியும்.
இஞ்சி

இஞ்சியை உணவில் சேர்த்து வந்தால், நன்கு அழகான ஒல்லியான உடலைப் பெறலாம். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
பூண்டு

பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, கொலஸ்ட்ராலை சீராக வைக்க உதவியாக இருக்கும்.

Related posts

ஹெல்த் ஸ்பெஷல்! நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!!!

nathan

உடல்சூட்டை குறைக்கும் நாட்டு வைத்தியம்!சூப்பர் டிப்ஸ்….

nathan

முளைக்கட்டி சாப்பிடுங்கள் !சமைத்து சாப்பிட வேண்டாம் ! நோய்கள் அண்டாது !

nathan

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கறிவேப்பிலை

nathan

கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு

nathan

கிரீன் டீக்கு பதிலா இந்த சிகப்பு டீயை குடிச்சு பாருங்க… இவ்வளவு நன்மைகளா….

nathan

வெற்றிலையில் உள்ள ஆச்சரியமான விஷயம்

nathan

சூப்பர் டிப்ஸ் மூலநோயை அடியோடு விரட்டலாம்! வீட்டிலேயே மருந்து இருக்கே!

nathan

நீங்கள் அடிக்கடி மதியம் தயிர் சாதம் சாப்பிடவங்க மொதல்ல இத படிங்க…

nathan