23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
tytrytytyty
ஆரோக்கியம் குறிப்புகள்

தும்மல் பற்றிய பல சுவாரஸ்ய தகவல் தெரியுமா?

தும்மலின் போது நமது மூக்கு மற்றும் நுரையீரலில் இருந்து 250 கிமீ வேகத்திற்கு காற்று வெளியேற்றப்படுகிறது.

தும்மல் என்பது கிருமிகள் மற்றும் வைரஸ்கள் பரவுவதற்கான முக்கிய வழிகளில் ஒன்றாகும்,

குறிப்பாக மழைக்காலங்களில் ஜன்னல்கள் மூடியிருக்கும் போது. ஒரு தும்மலினால் பல்லாயிரக்கணக்கான உமிழ்நீர் மற்றும் சளி துகள்கள் வெளியேறலாம். இந்த ஒவ்வொரு துகளும் 0.5 – 5 மைக்ரான் விட்டம் கொண்டிருக்கும். தும்மல் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை இந்த பதவில் பார்க்கலாம்.

தும்மல்கள்

சிலர் நிலமே அதிரும் அளவிற்கு சத்தமாக தும்முவார்கள், சிலரோ மிகவும் மெதுவாக சத்தமே வராதபடி தும்முவார்கள். ஆனால் அனைவரும் தும்மல் வரும்போது கண்களை மூடிக்கொள்வார்கள். இதெற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?
tytrytytyty

தும்மல் ஏற்பட காரணம்

தும்மல் ஏற்படுவதற்கு தற்போது கூறப்படும் காரணம் நமது உடலை தாக்கும் வைரஸ்களை நம் உடலில் இருந்து வெளியேற்றும் ஒரு பரிணாம பிரதிபலிப்புதான் இது. தும்மல் ஒரு சிறிய எரிச்சலால் கூட தூண்டப்படலாம். பொதுவாக மூக்கின் சளி சவ்வு மற்றும் நுரையீரல், காதுகள் அல்லது கண்களில் இருக்கும் கிருமிகள், வைரஸ்கள், ஒவ்வாமை அல்லது பிற துகள்களினால் ஏற்படும் எரிச்சலால் தும்மல் ஏற்படுகிறது.

தும்மலின் விளைவுகள்

தும்மல் என்பது இயற்கையான உடல் ரீதியான பிரதிபலிப்பாகும், இது உங்கள் உடலில் இருந்து தேவையற்ற பொருட்கள் அல்லது எரிச்சலை உங்கள் மூக்கிலிருந்து அழிக்க அனுமதிக்கிறது. இதனை கட்டுப்படுத்த முயலும்போது அது உங்கள் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

தும்மலை கட்டுப்படுத்தினால் என்ன நடக்கும்

மூக்கு மற்றும் வாய்தான் உங்கள் தும்மலை கட்டுப்படுத்த இருக்கும் கடைசி வாய்ப்பு ஆகும். இந்த பகுதிகளில் தும்மலை அடக்கினால் அது உங்கள் சைனஸின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். நீங்கள் வாய்ப்பகுதியில் தும்மலை நிறுத்தினால், நீங்கள் ஒரு வல்சால்வாவை உருவாக்குவீர்கள், இதனால் கடுமையான இருமல் ஏற்படும்.

தும்மலை உருவாக்கும் தசைகள்

தும்மல் ஒரு நொடியில் வந்து செல்வதாக இருக்கலாம். ஆனால் அதற்கு பின்னால் பல தசைகளின் பங்கு இருக்கிறது. வயிற்று தசைகள், மார்பு தசைகள், நுரையீரலுக்கு கீழே இருக்கும் தசைகள், குரல் தண்டு தசைகள், தொண்டையின் பின்புறத்தில் தசைகள், கண் இமைகளில் உள்ள தசைகள் என அனைத்தும் ஒன்று சேர்ந்துதான் ஒரு தும்மலை உருவாக்குகிறது.

பாதிப்புகள்

தும்மலை அடக்குவதால் ஏற்படும் அழுத்தம் உங்களுக்கு கடுமையான இருமலை உண்டாக்கும். இதனால் உங்கள் முதுகில் வலி ஏற்படலாம். சிலசமயம் தும்மல்கள் கீழ் முதுகில் சுளுக்கை ஏற்படுத்தும். மிகவும் சக்திவாய்ந்த தும்மலை கட்டுப்படுத்துவது உங்களுக்கு எலும்பு முறிவை கூட ஏற்படுத்தலாம்.

தும்மல் வரும்போது ஏன் கண்கள் மூடிக்கொள்கிறது?

தும்மல் வரும்போது யாராலும் கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. இதுவும் நம்மால் கட்டுப்படுத்த முடியாத ஒரு தன்னிச்சை செயலாகும். கண்களை மூடுவது தும்மலினால் கண்களுக்கு பின்புறம் ஏற்படும் அழுத்தத்தையும், அசௌகரியத்தையும் தடுக்கத்தான். மற்றொரு காரணம் தும்மலின் பொது வெளிப்படும் கிருமிகளும், வைரஸ்களும் கண்களுக்குள் நுழையாமல் இருக்க நம் உடல் செய்துகொள்ளும் தன்னிச்சை செயல்.

இதயத்தின் மீது பாதிப்பு

நமது இதயம் துடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. ஆனால் தும்மல் நமது இதயத்துடிப்பை மீது ஒரு விநாடி குறைக்கும். ஆனால் தும்மல் முடிந்தவுடன் அடுத்தத் துடிப்பு விரைவாக வரும். தும்மல் நமது உடலில் இருக்கும் கிருமிகளை வெளியேற்றும் ஒரு நிகழ்வு ஆகும். இதனை கட்டுப்படுத்துவது நமது உடலின் மீது எதிர்மறை விளைவுகளைத்தான் உண்டாக்கும்.

Related posts

வாக்குவம் க்ளீனருக்கு `வெல்கம்’…டஸ்ட் அலர்ஜிக்கு `டாட்டா’! ஷாப்பிங் போகலாமா..?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தாழ்வு மனப்பான்மையை போக்க இதை செய்யலாம்…

nathan

மும்பையில் அமிதாப் பச்சனின் மிகப்பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்த ஸ்டேட் பாங்க்…

nathan

நயன்தாராவின் கம்பீரமான அழகுக்கு காரணம் இந்த ரகசியங்கள்தானாம்…!

nathan

குழந்தைப் பேறுக்கு இந்த மரம் ஒரு வரம்! கல்யாண முருங்கையின் மருத்துவ பயன்கள் ..

nathan

பெண்கள் தங்களின் காதலரை பற்றி நம்பும் பொய்கள் என்னென்ன தெரியுமா?

nathan

இந்த குணங்கள் உள்ளவர்கள் மிகவும் சிறப்பானவர்களாக இருப்பார்கள் !…

sangika

உங்களுக்கு தெரியுமா 50க்கும் மேற்பட்ட நோய்களை விரட்டியடிக்கும் சின்ன வெங்காயம்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… கொழுகொழுன்னு இருக்க பொண்ண கட்டிக்கிட்டா சந்தோஷமா இருக்கலாமாமே…

nathan