24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
Skin 1
ஆரோக்கிய உணவு

whitening skin naturally- வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இத படிங்க…

அனைவருக்கும் சருமம் நன்கு வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக எத்தனையோ அழகுப் பொருட்களை முயற்சி செய்து பார்த்திருப்போம். அதிலும் ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் என்று பல வழிகளை மேற்கொண்டிருப்போம்.

இவ்வாறு மேற்கொண்டால் மட்டும் போதாது, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். இதனாலும் நல்ல அழகான சருமத்தை பெறலாம். குறிப்பாக உண்ணும் உணவு முறையில் நல்ல ஆரோக்கியத்தை பின்பற்ற வேண்டும். அதற்கு பச்சை இலைக் காய்கறிகள், வைட்டமின் நிறைந்த உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். அதுமட்டுமின்றி, நிறைய தண்ணீர் குடித்து, நல்ல உடற்பயிற்சியை செய்ய வேண்டும். இதனால் தண்ணீரானது உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றிவிடும். உடற்பயிற்சி செய்தால், உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமம் நன்கு பொலிவாக இருக்கும். எனவே சருமம் வெள்ளையாக வேண்டுமென்பதற்காக கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட, இயற்கை முறையில் ஒரு சில சருமத்திற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட்டால், வெள்ளையாக மாறலாம். அதிலும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, வைட்டமின் ஏ, சி மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

சருமத்தை வெள்ளையாக்க உதவும் 13 உணவுகள்
Skin 1
கேரட்
கேரட்டில் வைட்டமின் சி மற்றும் கரோட்டீன் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, இவை சருமத்திற்கும், கூந்தலுக்கும் மிகவும் சிறந்தது. எனவே கேரட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், சருமம் நன்கு பொலிவு பெறும்.

பப்பாளி
பப்பாளியில் வைட்டமின் சி இருப்பதோடு, வைட்டமின் ஏ, ஈ மற்றும் சருமத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளது. எனவே இந்த பழத்தை ஃபேஸ் பேக் அல்லது ஸ்கரப் போன்றவற்றை செய்யலாம். அதுமட்டுமின்றி, இவற்றை சாப்பிட்டால், முறையற்ற மாதவிடாய் சுழற்சியும் சரியாகிவிடும்.

தக்காளி
இந்த சிவப்பு நிற அழகான காய்கறியில் லைகோபைன் சத்து அதிகம் உள்ளது. இந்த பழத்தை அதிகம் சாப்பிட்டால், சருமம் பொலிவாவதோடு, உடல் எடை குறைந்து, புற்றுநோய் வருவதும் தடைபடும்.

கிவி
இந்த சிட்ரஸ் பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால் வெண்மையான சருமத்தை பெறலாம். அதுமட்டுமல்லாமல், அதனை முகத்திற்கு தடவும் போது, கரும்புள்ளிகள், வெடிப்புகள் போன்றவை நீங்கிவிடும்.

பீட்ரூட்
இந்த காய்கறியில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளதால், இதை சாப்பிடும் போது உடலில் இத்த ஓட்டம் அதிகரித்து, நல்ல அழகான கன்னங்களை பெறலாம். அதற்கு தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும். இல்லையெனில் இதனை அரைத்து முகத்திற்கு ஃபேஸ் பேக்காக போடலாம்.

பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகள் சருமத்திற்கு மட்டுமின்றி, உடல் முழுவதற்கும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பசலைக் கீரை போன்றவை மிகவும் ஆரோக்கியமானவை.

ஸ்ட்ராபெர்ரி
இந்த புளிப்பு சுவையான பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இதனை சாப்பிட்டால், இதன் நிறத்தை பெறலாம்.

சிவப்பு குடைமிளகாய்
சிவப்பு காய்கறிகளில் ஒன்றான சிவப்பு குடைமிளகாயில் லைகோபைன் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

Food for Glowing Skin
டீ
டீ வகைகளில் கிரீன் டீயில் சருமத்திற்கான நன்மைகள் பல அடங்கியுள்ளன. இதனை சாப்பிட்டால், சருமத்தில் உள்ள செல்கள் மென்மையாவதோடு, தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.

மஞ்சள் நிற குடைமிளகாய்
இந்த வகையான குடைமிளகாயில் வைட்டமின் சி இருப்பதோடு, சிலிகா இருப்பதால், இவற்றை அதிகம் உணவில் சேர்க்கும் போது, சருமம் நன்கு பொலிவோடு மின்னும்.

சோயா பொருட்கள்
சோயா பொருட்களில் ஜிங்க் மற்றுட் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இதனை அதிகம் சாப்பிட்டால், பொலிவிழந்த சருமமும் பொலிவு பெறும். மேலும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கும். உதாரணமாக, சோயா பால் முகப்பருவை சரிசெய்யும்.

ப்ராக்கோலி
இந்த சக்தி வாய்ந்த காய்கறியில் சருமத்தை வெள்ளையாக்கும் வைட்டமின் சி மற்றும் ஈ போன்றவை இருப்பதால், அவை உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தை பொலிவாக்குகிறது.

மீன்
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் இதர சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. எனவே இதனை அதிகம் சாப்பிட்டால், சருமம் வெள்ளையாகி, அழகாகிவிடும். அதுமட்டுமின்றி, இதனை சாப்பிடும் போது, சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்களை குணப்படுத்தும்.

Related posts

சுவையானபலாப்பழ ரெசிபி

nathan

சற்றுமுன் பிரபல நடிகர் திடீர் மரணம்… இரங்கல் தெரிவித்து வரும் பிரபலங்கள்

nathan

உடல்நலன் காக்கும் உணவுமுறை!

nathan

கருப்பு கொண்டைக்கடலை

nathan

உடலை குளிர்ச்சியாக்கும் அகத்திக்கீரை தேங்காய்பால்

nathan

தெரிஞ்சிக்கங்க…வெந்நீர் குடித்தால் உணவுக்குழாய் பாதிக்குமா?

nathan

ருசியான கறிவேப்பிலை மிளகு குழம்பு செய்ய…!

nathan

சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி சாப்பிடுவது பாதுகாப்பானதா?

nathan

உங்களுக்கு தெரியுமா மாதம் 1 முறை வெறும் வயிற்றில் இந்த ஒரு மூலிகை ஜூஸை குடிச்சா குடல் புற்று நோய் வராது!!

nathan