34.1 C
Chennai
Monday, Jul 13, 2026
ஆரோக்கிய உணவு

முயன்று பாருங்கள் உங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு நாளைக்கு 3 முந்திரி பருப்பு!!

முந்திரியில் மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. இதில் வைட்டமின் பி5, பி6, ரிபோஃபிளெவின், தயாமின் உள்ளிட்ட காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் நிறைவாக உள்ளன.
இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் முந்திரியில், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

முந்திரியில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டுமெனில் முந்திரியை அன்றாடம் சிறிது உட்கொள்வது நல்லது.
முந்திரியில் உள்ள ஒரு வகையான ஃபிளவனாய்ட் கண்களைப் பாதுகாப்பதுடன், புறஊதாக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தைக் காத்து மிக விரைவில் முதுமை தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது.

ஒரு நாளைக்கு 3 முந்திரி பருப்பைச் சாப்பிட்டுவந்தால், பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படக் கூடிய நோய்கள் வராமலே தடுக்கமுடியும். இதய நோயாளிகள் முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.

100 கிராம் முந்திரியைச் சாப்பிட்டால், 553 கலோரி கிடைத்துவிடும். மேலும் இதில், கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. ஊட்டச்சத்துக் குறைப்பாட்டால் ஏற்படக் கூடிய அனீமியா உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

முந்திரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான செலினியம் மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Related posts

உடல் குளிர்ச்சியாக வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!….

sangika

stroke symptoms in tamil – ஸ்ட்ரோக் (Stroke) அறிகுறிகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…கொழுப்பைக் கரைக்கும் கத்தரிக்காய்…!

nathan

மூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள்

nathan

சுவையான கொத்தமல்லி சப்பாத்தி

nathan

இரவில் தூங்கும் முன் வாழைப்பழம் சாப்பிடலாமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா எண்ணிலடங்காத நோய்களுக்கு மருந்தாகும் சோளக்கருதின் நார்!

nathan

சுவையான மணத்தக்காளி வத்தல் குழம்பு

nathan

தெரிந்துகொள்வோமா? சுவாசப் பிரச்சனைகளை சரி செய்ய உதவும் வீட்டு நிவாரணிகள்!!!

nathan