29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
16700587951a49dc86bdb0a2d023b8f81d439e619 559602930
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! இரும்புச்சத்தை அதிகரிக்கும் அப்பத்தாக்களின் பலகாரம் கேழ்வரகு குலுக்கல்ரொட்டி..

பார்த்து பார்த்து சமைத்துகொடுத்தாலும்டாக்டர்களின் சத்தில்லை என்னும் ஒரு வார்த்தை நம்மை சோர்ந்து போகவே செய்கிறது. தினம் ஒரு காய்கறி, வாரம் இரு முறை சுண்டல், பழச்சாறு, தானியங்கள் என்று பட்டியலிட்டாலும் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை என்று சொல்ப வர்கள் மறந்து போன விஷயம் வெல்லத்தைப் பயன்படுத்துவதுதான்.

வெல்லத்தால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள் குறைந்து சர்க்கரை சேர்க்கப்பட்ட இனிப்புகளின் வரவால் தான் நாம் ஏராளமான சத்துக்களை இழந்து நிற்கிறோம். விதவிதமான இனிப்புகளை வெல்லம் சேர்த்து சமைத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். வேண்டிய சத்துக்க ளும் குறையின்றி கிடைக்கும்.

வெல்லம், கேழ்வரகு இரண்டுமே சத்துக்கள் மிகுந்தவை.

அதை அடையாக செய்து கொடுக்கும் போது சில குழந்தைகள் முரண்டு பிடிப்பார்கள். இவை இரண்டையும் கலந்து கொடுத்து பாருங்களேன். தினமும் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்.

தேவை:
கேழ்வரகு -2 கப்,
வெல்லம்- 2கப் அல்லது இனிப்புக்கேற்ப
வறுத்த வேர்க்கடலை – 1 கப்
உப்பு -1 சிட்டிகை,
எண்ணெய் – தேவைக்கு.

செய்முறை:
கேழ்வரகை சுத்தம் செய்து சிட்டிகை உப்பு கலந்து நீர் விட்டு அடைமாவு பதத்துக்கு சற்று தளரவேபிசைந்து தோசைக்கல்லில்இலேசாக எண் ணெய் விட்டு மெலிதாக இல்லாமலும், பருமனாக இல்லாமலும்போட்டு எடுக்கவும். அதிகம் வேக விட வேண்டாம்.பிறகு ஆறியதும் அதை சிறுதுண்டுகளாக பிட்டு வைக்கவும்.

வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் விட்டு இலேசாக ஒன்றிரண்டாக பொடிக்கவும். அதிகமாக பொடிக்க வேண்டாம்.வெல்லத்தைப் பொடித்து அரைத் தம்ளர் நீர் விட்டு பாகு காய்ச்சவும். பாகு கெட்டியாக இருக்க வேண்டாம். வெல்லம் சற்று கரைந்து மிதமான பதம் வந்தாலே போதும். பிறகு கசடை வடிகட்டி சூடான வெல்லப்பாகில் நறுக்கிய கேழ்வரகு துண்டங்களைப் போட்டு பொடித்த வேர்க்கடலையைத் தூவுங்கள். பிறகு பாத்திரத்தை நன்றாக குலுக்கி வையுங்கள்.மூன்றுமணி நேரம் கழிந்ததும் சிறிய கிண்ணங்களில் வைத்து பரிமாறுங்கள்.

ஒருவாரம் வரை வைத்து பயன்படுத்தலாம்.கடையில் விற்கும் இனிப்புகளின் சுவையை மிஞ்சும் சுவையில் இருப்பதோடு சத்துக்களையும் கொடுக்கும் அப்பத்தாக்களின் மறந்து போன பலகாரங்களில் இதுவும் ஒன்று. எளிமையான முறையில் செய்யக்கூடிய பலகாரத்தை செய்து சுவைத்து சொல்லுங்கள்.

16700587951a49dc86bdb0a2d023b8f81d439e619 559602930

newstm.in

Related posts

தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

nathan

கொண்டைக்கடலை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சமையல் அறையை அழகாக்கும் ‘மாடுலர் கிச்சன்!

nathan

உங்களுக்கு சீக்கிரம் தொப்பையை குறைக்கணுமா? இதோ எளிய நிவாரணம்….

nathan

அவசியம் படிக்க..இவர்கள் மட்டும் கிரீன் டீ குடித்தால் எவ்வளவு ஆபத்து தெரியுமா?

nathan

உணவில் அதிகளவு தேங்காய் சேர்ப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா?

nathan

குழந்தைகளுக்கு சத்தான மிளகு – வேர்க்கடலை சாதம்

nathan

உங்களுக்குதான் இந்த விஷயம் சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்…. இந்த உணவுகளுக்கு ‘குட்-பை’ சொல்லுங்க…

nathan

சோகத்தாலோ கோபத்தாலோ மன அழுத்த‍ம் உள்ள‍வர்களில் சிலருக்கு இந்த விநோதம் நிகழும்!…

sangika