22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
29141234187be1cb67e21f4f6fe889c0091be335 685856619
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் எதற்கு பயன்படுகிறது…?

அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், பல பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை அதிகரித்து அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. முதலில் அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை சுத்தமான நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, அந்த நீரை வடிகட்டி சேகரித்து, அந்நீரால் முகம் மற்றும் கூந்தலைப் பராமரிக்கலாம். சரும சுருக்கம் அரிசி கழுவிய நீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும். அதற்கு காட்டனை அரிசி கழுவிய நீரில் நனைத்து, பின் அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.

அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும். கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும். அரிசி கழுவிய நீர் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, அதனைக் குடித்தால், உடலின் ஆற்றலும் அதிகரிக்கும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட்டுகளும், மற்ற ஊட்டச்சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது.

29141234187be1cb67e21f4f6fe889c0091be335 685856619

Related posts

சூப்பர் டிப்ஸ் தினமும் 6 வறுத்த பூண்டு சாப்பிடுங்க… அப்புறம் நிகழும் மாற்றத்தை பாருங்க..!

nathan

பல உபாதைகளிற்கு நிவாரணம் அளிக்கும் நீர்; இத்தனை நன்மைகளா?

nathan

இலவங்கப்பட்டை எண்ணெயின் ஆச்சரியமான நன்மைகள்

nathan

பால் அல்லது தயிர் – இவற்றில் எது ஆரோக்கியமானது?

nathan

இந்த 10 அற்புதமான ஜூஸ்களை கொண்டு எப்படி உடல் எடையை குறைக்கலாம் தெரியுமா?

nathan

இஞ்சியை தோல் நீக்க ரொம்ப சிரமப்படுறீங்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தெரிஞ்சிக்கங்க…இரவு நேரங்களில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க… தினமும் ‘பிளாக் டீ’ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

nathan

உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் சிறப்பான உணவுகள்!!!

nathan