32.4 C
Chennai
Thursday, Jul 17, 2025
255225161651e91a508bafd1a33ae459e37bf62cf
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! மூலநோயில் இருந்து நிவாரணம் தரும் துத்திக் கீரை!

துத்திக் கீரைகளில் கருந்துத்தி, சிறு துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி என சில வகைகள் இருக்கின்றன. அனைத்து வகை துத்தியும் ஒரே மாதிரியான மருத்துவ குணம் பெற்றுள்ளது. ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப் பருத்து வெளிவருவதைத்தான் மூலநோய் என்கிறார்கள். மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகும்போது, மலம் வெளியேறாமல் உள்ளுக்குள்ளேயே நின்று இறுக்குகிறது. முக்கி வெளியேற்ற முற்படும்போது மலவாய்க் குடலில் இருந்து சிரைகள் பாதிக்கப்பட்டு வெளியேதள்ளிக்கொண்டு வந்து விடுகின்றன. தவிர, காய்ந்த மலம் ஆசனவாயைக்கிழிப்பதால் ரத்தம் பீறிட்டு வெளியே வரும்.ஒவ்வொரு நாளும் இதே மாதிரி மலம்கழிக்கும்போது அந்த வாய்ப் பிளந்துகொள்ளும்.இதை பிஸ்ஸர் அல்லது ஆசனவாய் வெடிப்பு என்கிறார்கள். இது புண்ணாகி நாளடைவில் சீழ் மூலம் அல்லது பவுத்திரமாக மாறும். இவ்வாறே நவ மூலங்கள் உண்டாகின்றன. ஆங்கில வைத்தியத்தில் இதை முதல் டிகிரி, இரண்டாவது டிகிரி, மூன்றாவது மற்றும் நான்காவது டிகிரி என நான்கு வகைகளாகப் பிரிப்பார்கள்.ஆனால் நமது தமிழ் முன்னோர்கள் இதை இருபத்தோருவகைகளாகப் பிரித்தார்கள். நீர் மூலம், செண்டு மூலம், முளை மூலம், சிற்று மூலம், வரண் மூலம், ரத்த மூலம், வினைமூலம்,மேக மூலம், பௌத்திர மூலம், கிரந்திமூலம், சூத மூலம், புற மூலம், சீழ் மூலம், ஆழி மூலம், தமரகமூலம், வாத மூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம் மற்றும் கவ்வு மூலம். இதில் ஒன்பது வகைகள் மிகக் கடுமையானவை என்பதால் இவற்றை நவமூலம் என்றும் சொன்னார்கள். நமது மூதாதையரான சித்தர்கள் மூல நோயை குணப்படுத்தும் பல அரிய மூலிகைகளை ஓலைச்சுவடிகளில் விட்டுச் சென்றுள்ளார்கள். அதனடிப்படையில் மூலநோய்க்கு பிரத்யேகமான மூலிகை மருந்துகள் தயாரிக்கப்பட்டு அளிக்கும்போது பக்க விளைவுகள் இல்லாமல் மூலநோய் குணமாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள், உடல் சூடு உள்ளவர்கள், ஆசனத்தில் கடுப்பு உள்ளவர்கள், மேகச் சூடு உள்ளவர்கள் துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதால் நிவாரணம் அடையலாம்.255225161651e91a508bafd1a33ae459e37bf62cf 1982159679

Related posts

தினமும் காலையில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

பெண்களை அதிகம் தாக்கும் தைராய்டு…

nathan

சுவையான காராமணி சாண்ட்விச்

nathan

நொறுக்குத் தீனி உடலுக்குக் கேடா?

nathan

உடல் சூட்டை தணிக்கும் தாமரைப்பூ

nathan

உங்களுக்கு தெரியுமா சின்ன வயசுல சாப்பிட்ட இந்த பழம் பித்த நீர், மூல பிரச்சனைகளை குணப்படுத்துகிறதாம்..!

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் 10 சைவ உணவுகள்!!!

nathan

பீட்ரூட் புலாவ்

nathan

இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கும் காளான்

nathan