30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
தலைமுடி சிகிச்சை

சூப்பர் டிப்ஸ் ! பெண்களின் தலை முடியின் வளர்ச்சி உதவும் கற்றாழை எண்ணெய்…!!

கற்றாழை பெண்களின் தலை முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க, கற்றாழையில் எண்ணெய் தயாரித்து உபயோகப்படுத்தலாம். கற்றாழை மிகவும் அற்புதமான மூலிகைப் பொருள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியம் முதல் சருமம், தலைமுடி போன்றவற்றின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வல்லது. தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள், கற்றாழை ஜெல்லைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும். கற்றாழையை கொண்டு எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். ஆனால் கற்றாழை எண்ணெய் தயாரித்து வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால், மூன்றே மாதங்களில் தலைமுடி நன்கு வளர்ந்திருப்பதைக் காணலாம்.

தேவையான பொருட்கள்: கற்றாழை இலை, தேங்காய் எண்ணெய் 50 மிலி. செய்முறை: முதலில் கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். செய்முறை: கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து, 2 நாட்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு ஊற வைத்துள்ள கற்றாழை ஜெல் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, குறைவான தீயில் 10 நிமிடம் நன்கு கிளறி விட்டு சூடேற்றி, ஒரு பதத்திற்கு வந்ததும் இறக்கி குளிர வைத்து, வடிகட்டினால், கற்றாழை எண்ணெய் தயார். பயன்படுத்தும் முறை: கற்றாழை எண்ணெயை இரவில் படுக்கும் முன் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்வதால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று வலிமையடைந்து, அதன்

வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.

Related posts

தலை முடி கருமை மினுமினுப்பு பெற

nathan

எலுமிச்சை சாறை எப்படி உபயோகித்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும் தெரியுமா?

nathan

கூந்தல் நுனி வெடிப்புக்கான வீட்டு சிகிச்சை முறையை அறிந்து கொள்ளலாம்.

nathan

தலைமுடி உதிர்ந்த இடத்தில் முடி வளர எளிய இயற்கை வழிமுறைகள்

nathan

கூந்தலுக்கு ஆரஞ்சு தோல் சிகிச்சை – தெரிந்துகொள்வோமா?

nathan

பொடுகு தொல்லையை எளிமையாக இயற்கை முறையில் போக்கும் வழிகள் – தெரிந்துகொள்வோமா?

nathan

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெந்தயம்

nathan

முடி கொட்டும் பிரச்சனைகளுக்கும், வழுக்கை பிரச்சனைகளுக்கும் வேம்பு!…

nathan

கூந்தலுக்கு ஆயில் மசாஜ் செய்வது எப்படி?

nathan