தலைமுடி சிகிச்சை

ஆண்களே! முடி அதிகமா கொட்டுதா? அப்ப இதெல்லாம் செய்யாதீங்க…

முடி கொட்டுவது சாதாரணம் தான். அதிலும் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 100 முடி கொட்டுவது சாதாரணம். ஆனால் அதற்கும் அதிகமாக கொட்டினால் தான் பிரச்சனை. மேலும் குளிர்காலத்தில் முடி அதிகம் கொட்ட ஆரம்பிக்கும். எனவே இக்காலத்தில் முடியை சரியாக பராமரிப்பது முக்கியம். இல்லாவிட்டால், முடியின் அடர்த்தி குறைய ஆரம்பித்து, வழுக்கைத் தலை ஏற்பட்டுவிடும்.

அதிலும் தற்போது பல ஆண்களுக்கு இளமையிலேயே வழுக்கை விழுவதால், முடி அதிகமாக கொட்டும் போதே ஒருசில செயல்கள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இங்கு அப்படி முடி அதிகம் கொட்டி, அடர்த்தி குறைவாக இருக்கும் போது செய்யக்கூடாதவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பின்பற்றி, உங்கள் முடியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

ஓயாமல் சீவ வேண்டாம்

பெரும்பாலான ஆண்கள் ஓயாமல் தங்களின் முடியை சீவுவார்கள். ஆனால் இப்படி ஓயாமல் சீவுவதால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, விரைவில் வழுக்கை ஏற்பட்டுவிடும். அதுமட்டுமின்றி, தலைக்கு குளித்த பின்னர் டவல் கொண்டு கடுமையாக தலையை தேய்த்தால், வலுவிழந்து இருக்கும் முடி கையோடு வந்துவிடும். எனவே இச்செயல்களை எப்போதும் மேற்கொள்ளக்கூடாது. வேண்டுமெனில் உங்கள் கை விரல்களைக் கொண்டு தலைமுடியை சீவலாம்.

தினமும் தலைக்கு கூடாது

தினமும் தலைக்கு ஷாம்பு போட்டு குளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஷாம்புவில் உள்ள கெமிக்கல்கள் ஸ்கால்ப் மற்றும் மயிர்கால்களை வலுவடையச் செய்துவிடும். வேண்டுமெனில் வெறும் நீரில் தலையை அலசலாம். முக்கியமாக ஹேர் ட்ரையரை எக்காலத்திலும் பயன்படுத்தக்கூடாது.

ஹேர் ஸ்டைலிங் பொருட்கள்

ஹேர் ஸ்டைலிங் பொருட்களை முடி அதிகம் கொட்டும் போது பயன்படுத்தக்கூடாது. இதனால் மேன்மேலும் தான் முடி கொட்டும். அதுமட்டுமின்றி ஹேர் ஸ்டைலிங் பொருட்களான ஜெல், ஹேர் ஸ்ப்ரே போன்றவற்றைப் பயன்படுத்தினால், வழுக்கை நன்றாக தெரியும்.

தொப்பியை தவிர்க்கவும்

பெரும்பாலான ஆண்களுக்கு அடிக்கடி ஸ்டைல் என்று தொப்பி அணியும் பழக்கம் இருக்கும். ஆனால் இப்படி தொப்பி அணிவதால், முடியில் அழுத்தம் அதிகரிப்பதோடு, அதிகமாக வியர்த்து ஸ்கால்ப்பில் தொற்றுகள் ஏற்படக்கூடும். இதனால் கொட்டும் முடியின் அளவும் அதிகரிக்கும். எனவே இவற்றை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

சாதாரணமாக எண்ணக்கூடாது

முடி கொட்டுவது சாதாரணம் தான் என்று நினைத்து விட்டுவிட வேண்டாம். அப்படி விட்டால் நாளடைவில் வழுக்கைத் தலை ஏற்பட்டுவிடும். எனவே முடி கொட்டினால் உடனே மருத்துவரை சந்தித்து, அதற்கான காரணத்தை கண்டறிவதோடு, சரியான ஹேர் ஸ்டைல் என்னவென்று தெரிந்து அதனை மேற்கொள்ளுங்கள்.17 1439795453 5 hair care

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button