28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
16683252ad9779cead0596a4f924fa9fed9c681 588316725
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா இஞ்சியை அதிக அளவு எடுத்துகொள்ளக்கூடாது ஏன்…?

உங்களுக்கு தெரியுமா இஞ்சியை அதிக அளவு எடுத்துகொள்ளக்கூடாது ஏன்…? இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எந்த மாதிரியான நோயாக இருந்தாலும் அதற்கான மருந்தில் பெரும்பாலும் இஞ்சி இடம்பிடித்துவிடும். அது இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து ‘சுக்கு’ என்றான பிறகுதான் பயன்பாடு அதிகம். வயிற்றில் அல்சர் பிரச்சனை, சிறுகுடல் பாதிப்பு உள்ளவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல் சேர்த்து பயன் பெறலாம். அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும். சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது.

தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும். இஞ்சியை அதிகமாக குடிப்பதால், அது அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்று வலி பிரச்சனைகளை ஏற்படுத்தும். இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றாலும் கபம், வாதம், சிலேத்துமம் போக்குகிறது. இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு.

குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். பலவீனமான கர்ப்பிணிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உதிரப்போக்கை அதிகப்படுத்திவிடும்.

நோய்களால் பாதிக்கப்பட்டு, அதற்கு மருந்துகளை சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இஞ்சி டீயை குடிக்கக் கூடாது. ஏனெனில் அது மருந்துக்களுடன் வினைபுரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது. தினமும் 5 மி.லி. அளவு சாறை, தேனுடன் கலந்து பருகவேண்டும். அல்லது தோல் நீக்கிய இஞ்சியை சிறு துண்டுகளாக்கி தேனுடன் கலந்து தேன் ஊறலாக சாப்பிட வேண்டும். காலையில் இதை சாப்பிட்டால் நாள் முழுக்க ஜீரணம் நன்றாக இருக்கும்.

16683252ad9779cead0596a4f924fa9fed9c681 588316725

Related posts

காலை உணவுக்கு நோ… உடல்பருமனுக்கு வெல்கம்!

nathan

துர்நாற்றம் போக்க சிறந்த வழி! கட்டாயம் இத படிங்க!

sangika

உடல் எடை குறைக்க, நீரிழிவை கட்டுப்படுத்த, செரிமான கோளாறுகளை தடுக்க உதவும் ஒரே பொருள் என்ன தெரியுமா?

nathan

உங்கள் கணவரோ அல்லது மனைவியோ உங்களிடம் இப்படி நடந்து கொண்டால், அவர்கள் உங்களை ஒருபோதும் நேசிக்க மாட்டார்கள்!

nathan

முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கும் எவ்வளவு ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும்?

nathan

வாதம் போக்கும், சூடு தணிக்கும்… கோரை, ஈச்சம் பாய் நல்லது!

nathan

மாதவிடாய் நாட்களில் பெண்கள் அனுபவிக்கிற வலி சாதாரணமானதுதானா?

nathan

இந்த உணவுகளை மட்டும் அதிகமாக எடுத்துக்காதீங்க

nathan

நீங்க வீட்ல மூத்தவரா? இளையவரா? சொல்லுங்க..

nathan