29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
15723745658dd578ddc54ad72622e29f1ec6d3e97
முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! முகப் பருக்கள் மற்றும் தேமலை போக்கும் மருத்துவகுணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சள்…!

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும்.

முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வராது. கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதனை தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும். பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும். கஸ்தூரிமஞ்சளையும், பூலாங்கிழங்கையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.

15723745658dd578ddc54ad72622e29f1ec6d3e97

இதனை தினமும் செய்து வர வேண்டும். கஸ்தூரிமஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகப் பளபளக்க இது ஒரு சிறந்த பேஸ் பேக் ஆகும். முகத்தில் இயற்கை அழகு பேண, கஸ்தூரிமஞ்சள், கடலை மாவு, பச்சைப்பயறு மாவு, பாலாடை நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்யலாம். அல்லது வாரம் 4 முறை செய்யலாம்.

Related posts

உங்களுக்கு தெரியுமா இயற்கையாக தயாரிக்கப்பட்ட டே கிரீம் முகப்பரு வராமல் தடுக்க எப்படி உதவுகிறது?

nathan

வீட்டிலேயே கோல்டு ஃபேஷியல் செய்வதற்கான சுலபமான வழி இதோ…!

nathan

முகம், சருமப் பளபளப்புக்கு ஜப்பானியர்கள் சுட்டிக்காட்டும் 7 எளிய வழிமுறைகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க… தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா…?

nathan

இளமையூட்டும் கடலை மா

nathan

உப்பை கொண்டு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?

nathan

தெரிஞ்சிக்கங்க…உதடுகளில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும் சில அட்டகாசமான எளிய வழிகள்!

nathan

விஸ்கி ஃபேஸ் பேக்குகள்

nathan

யோகார்ட் முகத்திற்கு உபயோகப்படுத்தினால் என்னாகும் தெரியுமா?

nathan