36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! முகப் பருக்கள் மற்றும் தேமலை போக்கும் மருத்துவகுணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சள்…!

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும்.

முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வராது. கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதனை தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும். பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில் குணமாகும். கஸ்தூரிமஞ்சளையும், பூலாங்கிழங்கையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.

இதனை தினமும் செய்து வர வேண்டும். கஸ்தூரிமஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகப் பளபளக்க இது ஒரு சிறந்த பேஸ் பேக் ஆகும். முகத்தில் இயற்கை அழகு பேண, கஸ்தூரிமஞ்சள், கடலை மாவு, பச்சைப்பயறு மாவு, பாலாடை நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்யலாம். அல்லது வாரம் 4 முறை செய்யலாம்.

Related posts

செயற்கை இமைகள் கண்களில் அதிக நேரம் வைப்பதால் வரும் விளைவுகள்!!

nathan

இதோ எளிய நிவாரணம்! உங்க சருமத்துல எப்பவும் எண்ணெய் வழியுதா? தக்காளி ஒன்னு போதும் அத நிறுத்த…!

nathan

முகத்திலுள்ள தழும்புகளை நீக்க வேண்டுமா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

முகத்தில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் போக்க இந்த ஒரு பொருள் போதும்!

nathan

சூப்பர் டிப்ஸ் ! எலுமிச்சை சாற்றினை எதனுடன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போடுவது பலன் தரும்…!

nathan

7 நாட்களில் முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க…

nathan

உங்க முகம் அடிக்கடி வறண்டு போகுதா? இதை மட்டும் பயன்படுத்துங்கள்…

nathan

உங்களுக்கு தெரியுமா முகத்திற்கு ஆவி பிடிப்பதால் என்னென்ன பயன்கள்…?

nathan

முகத்தில் இருக்கும் சுருக்கத்தைப் போக்க வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க…

nathan