29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1185386763f631eacff94aa8b83b17db8e6ab8c01665257184
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா தினமும் சிறிது துளசி சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் பயன்கள்…!!

துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். துளசியில் சாதாரணமாக காணப்படுவது வெண் துளசியாகும். இது தவிர கருந்துளசி, கிருஷ்ண துளசி, ராம துளசி, செந்துளசி, சிவ துளசி, பெருந்துளசி, சிறுதுளசி, கல்துளசி, நல்துளசி, நாய் துளசி, நிலத்துளசி, முள் துளசி, கற்பூர துளசி என அதிக துளசி வகைகள் உள்ளன. நாம் நினைப்பதுப் போல துளசி நோய் நிவாரணி மட்டுமல்ல. சுற்றுச்சூழலிலும் இதன் பங்கு மகத்தானது. காற்றிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து ஆக்சிஜனாக வெளியேற்றும் அற்புத பணியை செய்கிறது. எந்த காய்ச்சலாக இருந்தாலும், துளசியிடம் இருக்கிறது தீர்வு. இதை உலகளவில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது.

ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். துளசி இலை சாப்பிடுவதால் வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நெருங்காது.

1185386763f631eacff94aa8b83b17db8e6ab8c01665257184

உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும்.துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும். துளசியின் மருத்துவ குணங்கள் துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். சுத்தமான செம்பு பாத்திரத்தில், கொஞ்சம் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி துளசியைப் போட்டு 8 மணி நேரம் மூடி வைத்து பின்பு அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை வெறும் வயிற்றில் 48 நாட்கள் செய்து வந்தாலே எந்த நோயும் அண்டாது. தினமும் காலையில் 10 துளசி இலையை மென்று தின்பதால் இரத்தம் சுத்தியடையும். மார்பு வலி, தொண்டை வலி, வயிற்று வலி ஆகிய கோளாறுகள் நீங்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!

nathan

எண்ணெய் சேர்க்காத வெஜ் குருமா

nathan

உங்களுக்கு தெரியுமா தேனுடன் இலவங்கப்பட்டை சேர்த்து சாப்பிட்டால் உடலில் கொழுப்பு கரைந்து விடும்…

nathan

வெள்ளை அரிசி, கைக்குத்தல் அரிசி, பாஸ்மதி அரிசி – மூன்றில் எது நல்லது??

nathan

இந்த உணவுகள் கூட கல்லீரலின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் என உங்களுக்கு தெரியுமா???

nathan

சுவையான மசாலா ஸ்டஃப் செய்யப்பட்ட பாகற்காய் ஃப்ரை செய்வது எப்படி ?

nathan

வயிற்று உபாதைகளுக்கு உகந்த வெந்தயக் குழம்பு

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள்

nathan

அவசியம் படிக்கவும்!இரவில் உணவை தாமதமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

nathan