அவஸ்தைப்படுவார்கள்? பொதுவாக வைட்டமின் பி12 குறைபாடு கீழ்கண்டவர்களுக்கு தான் வரும். * முதியவர்கள். * குடலில் வைட்டமின் பி12-ஐ உறிஞ்சும் பகுதியை அறுவை சிகிச்சை செய்தவர்கள் . * நீரிழிவுக்கான மருந்து மெட்ஃபோர்மினில் மருந்து எடுப்பவர்கள். * கடுமையான சைவ டயட் மேற்கொள்பவர்கள் * நெஞ்செரிச்சலுக்காக நீண்ட நாட்கள் ஆண்டாசிட் மருந்துகளை எடுப்பவர்கள். இப்போது வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான அறிகுறிகளைக் காண்போம்.
இந்த வைட்டமின் பி12 சிலரது உடலில் குறைவாக இருக்கும்.
ஒருவருக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், அதை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. ஏனெனில் இந்த குறைபாட்டினால் வெளிப்படும் அறிகுறிகள், நாம் சாதாரணமாக அன்றாடம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்று தான் இருக்கும்.


அறிகுறி #1 ஒருவரது உடலில் வைட்டமின் பி12 குறைவாக இருந்தால், அவர்களது உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறைவாக இருக்கும். இதனால் சருமம் மற்றும் கண்கள், சற்று வெளுத்தோ அல்லது மஞ்சளாகவோ காணப்படும்.
அறிகுறி #2 உடலில் வைட்டமின் பி12 குறைவாக இருக்கும் போது, உடலால் போதுமான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போய், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் கிடைக்காமல், எப்போதும் மிகுந்த களைப்பையும், பலவீனத்தையும் அனுபவிக்கக்கூடும்.


அறிகுறி #3 வைட்டமின் பி12 நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் நரம்புகளைப் பாதுகாக்கும் மீலின் உற்பத்தியில் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த வைட்டமின் சத்து ஒருவரது உடலில் குறைவாக இருந்தால், நரம்புகள் சேதமடை
ந்து ஊசி குத்துவது போன்ற உணர்வு இருக்கும்.
அறிகுறி #4 வைட்டமின் பி12 குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட நரம்பு மண்டலத்தை கவனித்து சரிசெய்ய முயற்சிக்காமல் இருந்தால், உடல் சமநிலையைப் பாதித்து, நடப்பது மற்றும் நகர்வதில் சிரமத்தை சந்திக்க வைக்கும்.