28.9 C
Chennai
Tuesday, Jan 27, 2026
kalan
ஆரோக்கிய உணவு

காளானை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது!..

இத்தனை நன்மைகளை வழங்கக்கூடிய காளான் சில கெடுதல்களையும் ஏற்படுத்தக்கூடியது. அலர்ஜியில் தொடங்கி உயிரிழப்பு வரைகூட ஏற்படுத்த கூடியது காளான். இதனை சரியாக பயன்படுத்தினால் அருமருந்து அதுவே தவறாக பயன்படுத்தினால் கொடிய விஷம். எப்படிப்பட்ட காளானை சாப்பிடக்கூடாது:

kalan

காளானை சுத்தப்படுத்தும் முன்பு அதனை சுத்தப்படுத்தும் நீரில் சிறிது எலுமிச்சை சாறை கலக்கவும். ஏனெனில் காளான் வெளிப்புறத்தில் உள்ள ஆக்சிஜனுடன் இணைந்து விரைவில் கருப்பு நிறமாக மாறிவிடும். எனவே எலுமிச்சைச்சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் காளான் கருப்பாவதை தடுக்கிறது.

பின்னர் காளானை ஒரு துணியில் பரப்பி அதிலுள்ள ஈரம் காய்ந்தவுடன் சமைக்கவும். பொதுவாக பாக்கெட்டில் வாங்கிய காளானை மூன்றுநாட்கள் வரை ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப்படுத்தலாம். ஃப்ரீசரில் வைக்கக்கூடாது. பாதி அளவுஎடுத்து உபயோகப்படுத்தி விட்டு மறுநாள் மீதியைஉபயோகப்படுத்தலாம். ஆனால் திறந்து வைக்கக்கூடாது. அப்படி செய்தால் காளான் கறுத்துவிடும்.

ஒரு இறுக்கமான டப்பாவில் போட்டு மூடிவைத்தால் மூன்று நாள் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். நறுக்கிய பிறகு கூட வைத்திருக்கலாம். சிறிது நிறம் மாறினால் பரவாயில்லை. ஆனால், பிசுபிசுப்பாக மாறினால் உபயோகப்படுத்தக் கூடாது.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது. காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

அதேபோல, காளானை நன்றாக சமைத்தபிறகே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். காளான் சத்தான பொருளாக இருந்தாலும் அதனை அனைவரும் சாப்பிட்டு விட முடியாது. சிலருக்கு சரும அலர்ஜி பிரச்சினைகள் இருக்கும், அப்படிப்பட்டவர்கள் காளானை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் அரிப்பு, சருமத்தில் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.

Related posts

சூப்பரான நார்த்தங்காய் சாதம்

nathan

மரவள்ளியில் மருத்துவக் குணங்கள் அதிகம்!

sangika

சூப்பரான எள்ளுப்பொடி

nathan

உங்களுக்கு தெரியுமா உடலுக்கு அதிகளவு சக்தியை தரும் கொள்ளுவை பற்றி!

nathan

கொண்டைக்கடலையை இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள் ! உடல் எடையை குறைக்க

nathan

சிறுநீரகப் பிரச்சனையை தீர்க்கும் வாழைத்தண்டு பச்சடி

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு வெங்காயம் சாப்பிட்டால் என்ன நன்மைகள் ஏற்படும்?..!!

nathan

ராகி உப்புமா

nathan

இரத்த அழுத்தம் குறைந்து இருதய நோய் வராமல் தடுக்கும் பலா சூப்பர் டிப்ஸ்….

nathan