22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
baby 2
ஆரோக்கியம் குறிப்புகள்

குழந்தைகளுக்கு அற்புத பலன்தரும் வசம்பு….!

நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாகப் பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.

baby 2

அதனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வசம்பு என்பது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ஒன்று என்று. ஆனால் அது அப்படியல்ல.

வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மை யையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.

வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்துசாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லாநாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.

பிறந்த குழந்தைகளுக்கு இந்த வசம்பை கையில் காப்பு மாதிரி கட்டுவார்கள். இது குழந்தையின் வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லை, வயிற்றில் ஏற்படும் அசெளகரியம், நெஞ்சு சளி போன்றவற்றை குணப்படுத்துகிறது.

இந்த கையில் வசம்பு கட்டும் முறையை குழந்தை பிறந்த 12 வது நாட்களில் செய்கின்றனர். வசம்பை தீயில் சுட்டு பொடியாக்கி அதை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது வயிறு வீக்கம் அல்லது வயிறு உப்புசம் ஆகியவை சரியாகி விடுகிறது.

வசம்பை சாம்பலாக்கிய பொடியை தண்ணீருடன் குழைத்து குழந்தையின் நெற்றியில் பொட்டு இட்டு வர பால் வாடைக்கு எந்த பூச்சும் பல்லி போன்றவை குழந்தையை அண்டாது. வசம்பு பொடியை குழந்தைக்கு பூசி விடுவதாலும், படுக்கையை சுற்றி தூவி விடுவதாலும் குழந்தையை பூச்சிகள் அண்டாது.

வசம்பை சாம்பலாக்கிய பொடியை தேங்காய் எண்ணெய்யுடன் குழைத்து குழந்தையின் வயிற்றில் தடவி வந்தால் வாய்வுத் தொல்லை நீங்கும். வசம்பையும் தேனையும் குழைத்து கொடுக்கும் போது குழந்தைக்கு பால் மட்டுமே உணவாக கொடுத்து வந்தால் விரைவில் வயிறு பிரச்சினை சரியாகி விடும்.

வசம்பு மற்றும் அதிமதுரம் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து இருமல், காய்ச்சல் மற்றும் வயிற்று வலிக்கு உதவுகிறது. நீண்ட நாள் மற்றும் வறட்டு இருமல் இருந்தால், வசம்பு மற்றும் அதிமதுரப் பொடியை சிறிது தேனுடன் கலந்து, இரவில் சாப்பிட்டு வர இருமல் வேகமாக குணமடையும்.

இந்த மருந்து குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. மேலும் குழந்தைக்கு நல்ல பேச்சு திறன், நல்ல கண் பார்வை திறன், அழகு, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல் போன்ற எண்ணற்ற பலன்களை அள்ளி வழங்குகிறது.

Related posts

உங்களுக்கு தெரியுமா இந்த உணவை சாப்பிட்ட பின் கண்டிப்பாக பால் குடிக்க கூடாது..?

nathan

மாரடைப்பை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால் அளவை ஈஸியா குறைக்க…இந்த பானங்கள நீங்க குடிக்கணுமாம்!

nathan

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்! மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?

nathan

நுரையீரலுக்கு வேட்டு வைக்கும் பாப்கார்ன் வாசனை!

nathan

எதுக்கலிப்பதற்கான சில பொதுவான அறிகுறிகள்….

sangika

பல்லையும் எலும்பையும் பாதிக்கும் பானம்

nathan

வாழ்க்கையை புரட்டிப்போட்ட சம்பவம் -70,000 பவுண்டுகள் மதிப்பிலான கிரிப்டோகரன்சியுடன் ஓய்வு பெற திட்டமிட்ட தம்பதி

nathan

இத படிங்க உடல் எடை அதிகரிக்க டிப்ஸ்..! எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாக இருக்கிறீர்களா.?!

nathan

அமர்ந்து வேலைசெய்பவர்கள் கட்டாயம் இத படிங்க!

sangika