உடல் வெப்பமடைவது, சரியான தூக்கமில்லாமல் போவது, கவனக் குறைவு, தோல் நோய்கள், எரிச்சல், படபடப்பு, உடலில் தண்ணீர் பற்றாக்குறை என கோடைகால பிரச்னைகளின் பட்டியல் நீளும்.
இந்த கோடை காலத்தில் உடலை சமநிலைக்கு வைத்திருப்பதில் நமது உணவுப் பழக்க வழக்கங்கள் முதல் இடத்தைப் பிடிக்கின்றன.
கோடை காலத்தில் எந்த உணவை தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.
கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் குளிர்ந்த நீரைக் குடிப்பது நல்லதல்ல. குளிர்சாதனப் பொருட்கள், பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள், இவையெல்லாம் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை.
நன்றாகப் பொரித்த உணவு வகைகளை ஒதுக்குங்கள். கிரில் சிக்கன், இந்த சிக்கன் சுவையாக இருக்கும், இது அதிக எண்ணெய், காரம் சேர்த்து வறுத்த உணவு. அதற்காக அதை உண்டால் ஆபத்து. சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், வகையறாக்களை முழுவதுமாய் ஒதுக்குங்கள். ‘ஐஸ் காபி’, ‘ஐஸ் டீ’ போன்ற பானங்கள் கோடை காலத்துக்கு உகந்ததல்ல. அவை எந்தக் காலத்துக்கும் உகந்ததல்ல என்பது வேறு விஷயம். எனவே அவற்றை விட்டு தள்ளியே நிற்பதே நல்லது. இருக்கவே இருக்கிறதே இளநீர், மோர், எலுமிச்சை பழச் சாறு போன்றவை.
உணவுப் பழக்கத்தில் ஒழுங்கைக் கடைபிடித்தாலே கோடையில் வாடாமல் தப்பிக்கலாம்.