vejarvai
ஆரோக்கியம் குறிப்புகள்

இயற்கை தந்த வாசனை திரவியம் இது..

‘ஐயோ என்ன வாடை இது.’ என்று இயல்பாகவே முகம் சுளிக்கவைக்கும் துர்நாற்றம் கோடைக் காலங்களில் இயல்பாகவே நம்மை தொற்றிவிடும். குறிப்பாக அக்குள் பகுதிகளில் அதிக வியர்வை நாற்றம் உண்டாகும்…

இன்று நறுமணமிக்க வாசனை திரவியங்களை துர்நாற்றம் நீக்க பயன்படுத்தினாலும் அவையெல்லாம் தற்காலிகமான தீர்வுகளே.. அன்றாடம் உபயோகப்படுத்துகிறோம்.

ஆனாலும் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே இவை நம்மை நறுமணத்தோடு வைத்திருக்கும்.

vejarvai

பிறகு மீண்டும் அவஸ்தைதான். ‘இருவேளை குளிக்கிறேன் ஆனாலும் இந்த வாடையால் என்னால் பொது இடங்களில் இயல்பாக இருக்க முடியவில்லை’ என்று புலம்புபவர்களுக்குத்தான் இந்த எளிய குறிப்புகள்.. சிலருக்கு உடலில் காற்றுப்புகாத இடங்களில் மட்டுமே அதிக வியர்வை உண்டாகும். சிலருக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை வியர்த்து வழியும்.

வியர்வையினால் மட்டுமே உடலில் துர்நாற்றம் வீசுவதில்லை. உடலில் இருக்கும் நச்சுக்கிருமிகள் உடலின் வியர்வையோடு வெளிப்படுவதாலும், வியர்வையை உறிஞ்சாமல் அப்படியே விடுவதாலும் துர்நாற்றம் அதிகரிக்கிறது.

முதலில் அதிகப்படியான வியர்வை நாற்றம் ஏன் வெளிப்படுகிறது என்பதை கவனியுங்கள்.

இறுக்கமிகுந்த காற்றுப்புகாத ஆடைகளால் வியர்வை உறிஞ்சப் படாமல் இருந்தாலும் கூட வியர்வை நாற்றம் உண்டாகும்.

மெல்லிய பருத்தி துணிகளாகவே அணிந்தாலும் வியர்வை நாற்றம் இருந்தால் துணிகளை தரமான பவுடர்களைக் கொண்டு சுத்தமாக அலசுங்கள். துணிகளை வெயிலில் உலர்த்தி காயவைத்து எடுங்கள்..

குளிப்பதற்கு முன்பு அரை மூடி எலுமிச்சம்பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குளித்து வந்தால் வியர்வை நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளை நீக்கி புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவும்.. இதே போன்று தக்காளிப் பழத்தையும் பிழிந்து குளித்து வரலாம்.

உணவுப் பழக்கங்களிலும் மாற்றங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். மசாலா, காரமிக்க உணவுகளைத் தவிர்த்து பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்..

குறிப்பாக சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி போன்றவற்றை அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.

கோடைக்காலங்களில் மாதம் இருமுறை கண்டிப்பாக அக்குளில் இருக்கும் முடிகளை ட்ரிம் செய்யாமல் சுத்தமாக நீக்குங்கள்.

வாரம் இரண்டு முறை எலுமிச்சைப்பழத்தைப் பாதியாக வெட்டி அக்குளில் நன்றாகத் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்கும்போது துர்நாற்றம் உண்டாகாது.

இயற்கை தந்த வாசனை திரவியம் இது.. இவையெல்லாம் செய்யும்போது சோப்புகட்டிகளையும் வாசனை திரவியங்களையும் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.

இவை எல்லாம் இரண்டு முறை செய்துவிட்டு பலனில்லை என்று சொல்லாமல் தொடர்ந்து செய்து வாருங்கள்..

உடல் எப்போதும் புத்துணர்ச்சியோடு.. வியர்வை நாற்றமின்றி இருப்பதைக் கண்டு மகிழ்வீர்கள்.

Related posts

மீண்டும் திருமணம் செய்துகொள்ள விரும்பும் தொகுப்பாளினி DD திவ்யதர்ஷினி

nathan

சாதாரண வெயில் தானே என்று எப்போதுமே எண்ணி விடாதீர்கள்!…

sangika

இத படிங்க உடல் பருமன் உண்டாக காரணங்கள் என்ன ??

nathan

அவசியம் படிக்க.. கால் மூட்டுகளில் `கடக் முடக்’ சத்தமும் வலியும் ஏன் வருகிறது;

nathan

இந்த உணவுகளை மட்டும் அதிகமாக எடுத்துக்காதீங்க

nathan

அடிக்கடி வரும் குமட்டலில் இருந்து மீள்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

பிறப்புறுப்பில் தொற்று மற்றும் வீட்டு மருத்துவம்

nathan

பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பாலின் அவசியம்

nathan

உங்களுக்கு தெரியுமா குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை சரிசெய்வது எப்படி…?

nathan