25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
kan thirusdi
ஆரோக்கியம் குறிப்புகள்

கண் திருஷ்டியால் ஏற்படும் பிரச்சினைகளை விரட்ட இந்த ஒரு பொருள் வீட்டில் இருந்தால் போதும்!…

இந்த உலகில் உங்களுக்கு தெரியாத பல அதிசய பொருட்கள் உள்ளது. நீங்கள் தினசரி உபயோகிக்கும் பொருள்களில் கூட பல வித்தியாசமான பொருட்கள் இருக்கக்கூடும். அந்த வகையில் பலரும் அறியாத ஒரு வித்தியாசமான அதேசமயம் மிகவும் உபயோகமான ஒரு பொருள் என்றால் அது கருப்பு மஞ்சள்தான்.

கருப்பு மஞ்சள் பற்று பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது உங்கள் ஜாதகத்தில் இருக்கும் பல பிரச்னைகளை சரி செய்து உங்கள் வாழ்கையையே மாற்றக்கூடிய சக்தி இதற்கு உள்ளது.

இந்த பதிவில் கருப்பு மஞ்சள் உங்களை எந்தெந்த பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றும் என்று பார்க்கலாம்.

kan thirusdi

உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை கருப்பு மஞ்சள் கொண்டு நீங்களே விரட்டலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் ஒரு சுபதினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு கிழக்கு திசை பார்த்து அமரவும்.

இப்பொது நீங்கள் வாங்கி வந்த கருப்பு மஞ்சள் மணியை கையில் வைத்து வேண்டுதலை தொடங்கவும். தொடர்ந்து உங்கள் வேண்டுதலிலும்கருப்பு மஞ்சளை உருட்டுவதிலும் கவனம் செலுத்தவும்.

108 முறை முடிந்தபின் சூரியபகவானை வழிபடவும். இப்போது கருப்பு மஞ்சள் உபயோகத்திற்கு தயாராகி விட்டது. இதனை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

அதிர்ஷ்டம் பெற

உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் அதிகரிக்க வேண்டுமெனில் 9 கருப்பு மஞ்சள் மணிகளை கொண்டு காப்பு செய்து அதனை உங்களை கையில் போட்டுக்கொள்ளுங்கள்.

இது உங்களை தீயசக்திகள் நெருங்காமல் பாதுகாப்பதுடன் ஆரோக்கியத்தையும் வழங்கும். மேலும் இதன்மூலம் உங்களை செல்வம் வந்து சேரும்.

வேலைக்கு

முக்கியமான நேர்முக தேர்விற்கோ அல்லது முக்கியமான வேலைக்கோ செல்லும்போது கருப்பு மஞ்சள் திலகத்தை நெற்றியில் வைத்து செல்லுங்கள். இது உங்களின் அதிர்ஷ்டத்தை அதிகரித்து உங்களின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்.

கண் திருஷ்டி

உங்கள் குழந்தைக்கோ அல்லது வீட்டில் உள்ள யாராவது கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டால் அதனை சரிசெய்ய கருப்பு மஞ்சள் ஒன்றே போதும்.

கருப்பு மஞ்சளை ஒரு துணியில் சுற்றி அதனை கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு ஏழு முறை சுத்திப்போடவும். இது கண்டதிருஷ்டியால் ஏற்படும் பாதிப்பை உடனடியாக குறைக்கும்.

நோய்

உங்கள் வீட்டில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கொஞ்சம் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு அதனை இரண்டு உருண்டைகளாக உருட்டவும்.

அதனுடன் வெல்லம் மற்றும் கருப்பு மஞ்சள் சேர்த்து பாதிக்கப்பட்டவருக்கு 7 முறை சுற்றவும். பின்னர் இதை பசுமாட்டிற்கு சாப்பிட கொடுக்கவும். இவ்வாறு செய்தால் விரைவில் நோய்வாய்பட்டவர் குணமடைவார்.

பணப்பிரச்சினை

உங்களுக்கு பணப்பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் கருப்பு மஞ்சளையும், குங்குமத்தையும் ஒவ்வ்ரு வெள்ளிக்கிழமையும் லக்ஷ்மி தேவிக்கு வைத்து வழிபடவும்.

அதன்பின்னர் அதனை உங்கள் லாக்கரில் வைக்கவும். அனைத்து பிரச்சினைகளும் விரைவில் தீரும்.

தொழில் நஷ்டம்

தொழிலில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்தால் ஒரு மஞ்சள் துணியில் சிறிது கருப்பு மஞ்சளை எடுத்துக்கொண்டு அதனுடன் 11 கோமதி சக்கரங்கள் மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை சேர்த்து ” ஓம் வாசுதேவயா நமஹ ” என்னும் மந்திரத்தை கூறி நீங்கள் வேலை செய்யும் இடத்தில் வைக்கவும். விரைவில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

வீட்டின் முகப்பு

சில கருப்பு மஞ்சள் விதைகளை உங்கள் வீட்டின் முகப்பில் ஒரு துணியில் கட்டி தொங்கவிடுங்கள். இது எந்த தீயசக்தியும் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் பார்த்துக்கொள்ளும் அதேசமயம் உங்கள் வீட்டின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

மாந்திரீகம்

கருப்பு மஞ்சள் மாந்திரீகம் தொடர்பான காரிங்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் கார்ப்பு மஞ்சள் காளிதேவிக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

கருப்பு மஞ்சள் வைத்து வழிபடும்போது காளி நமது வேண்டுதலை எளிதில் நிறைவேற்றி விடுவார் என்பது பரவலாக இருக்கும் நம்பிக்கையாகும்.

source: boldsky.com

Related posts

கட்டாயம் இதை படியுங்கள்..மாதவிலக்கை தள்ளி போடும் இயற்கை வழிகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…காலையில் மன அழுத்தம் இல்லாமல் இருக்க என்ன செய்யலாம்?

nathan

அலெர்ட்! இத படிங்க ..முதியோர்கள் அதிகநேரம் செல்போன் பயன்படுத்தலாமா?

nathan

இறுகிய மலம் வெளியேற

nathan

உடல் எடையை கட்டுக்குள் வைக்க!… இதை மட்டும் சரியாக செய்தாலே போதும்

nathan

திருமணத்திற்கு பிறகு பெண்களின் நிலை என்ன?

nathan

இந்த 5 பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிக்கவே மாட்டாங்களாம்.. தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

நரம்புத்தளர்ச்சி பிரச்சனை வந்தால்..!!

nathan

விட்டமின் இ கேப்சூலின் பயன்பாடுகள்

nathan