29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
juice
ஆரோக்கிய உணவுஆரோக்கியம் குறிப்புகள்

கோடை காலங்களில் நமது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்க கூடிய பானங்கள்!….

கோடை காலங்களில் நமது உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுக்க கூடிய பானங்களை கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், விரைவில் உடல் கொழுப்புகளை குறைக்க உதவும், பானக்களாக இருந்தால் அது எவ்வளவு நல்ல செய்தியாக நமக்கு இருக்கும்

உடல் பருமனை விரைவில் குறைக்க உதவும் கோடை காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய, வீட்டிலேயே தயாரிக்க எளிதான, ஆரோக்கியம்பயக்கக்கூடிய பானங்கள் குறித்து இங்கு நாம் காணலாம்.

juice

மாதுளம் பழம் மற்றும் பீட்ரூட் கொண்டு தயாரிக்கும் பானம்:

பீட்ரூட்டில் உள்ள‌ ஆன்டி‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ஆக்ஸிடன்ட், விட்டமின்கள், மினரல்ஸ், ஆகியவை உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டவை. அதேபோல் மாதுளையில் உள்ள அதிகப்படியான ஃபைபர் கொழுப்பை கரைப்பதில்பெரும் பங்கு வகிக்கிறது.

இத்தகைய நன்மைகளை கொண்ட மாதுளை மற்றும் பீட்ரூடை கொண்டு செய்யப்படும் பானம் உடலில் தீங்குவிளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதுடன், விரைவில் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

ஆரஞ்சு, கேரட் மற்றும் இஞ்சி கொண்டு தயாரிக்கப்படும் பானம்

சிட்ரஸ் ரசாயனம் அதிமுள்ளபழமான ஆரஞ்சில் உள்ள விட்டமின் சி, பீட்டா கரோட்டின், ஃபைபர், ஆகியவை உடல் கொழுப்பை கரைத்து விரைவில் உடல் பருமன் குறைய வகை செய்கிறது.

மேலும் இஞ்சியிலுள்ள சத்துக்கள் நல்ல செரிமானத்திற்கு வழி செய்வதுடன், உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க, வயிறு பிடிப்பை சரிசெய்ய, பல்வேறு அலர்ஜிகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

வெள்ளரிக்காய் மற்றும் புதினா கொண்டு தயாரிக்கப்படும் பானம்

வெள்ளரிக்காயில் இருக்கும் 90% நீர்சத்துக்கள் வெயிலில் ஏற்படும்,உடல் நீர் பற்றாக்குறையை போக்க வல்லது. மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

புதினா, இஞ்சி கலந்த பானத்தை அடிக்கடி குடிக்கும் பொழுது உடல் எடை விரைவில் குறைவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

எலுமிச்சை, இஞ்சி, தேன் கலந்த பானம்

எலுமிச்சை சாறை குளிர்பானமாக செய்து பருகும்போது அதுஉடல் பருமனை குறைக்க பெரிதும் உதவக்கூடியது. எலுமிச்சை, இஞ்சி, தேன் கலந்த பானத்தை அருந்தி வர உடலுக்கு நீர்ச்சத்து கிடைப்பதுடன், அது உடலில் சேரும் தேவையற்ற நச்சுக்களையும் வெளியேற்றி உடலை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.

Related posts

கருப்பு அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

nathan

காலையில் பல் துலக்காமல் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் ஏற்படும் பிரச்சனை என்ன தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த உணவுகளை தவறிக்கூட குக்கரில் சமைச்சிடாதீங்க

nathan

சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் வாழைத்தண்டு! தெரிஞ்சிக்கங்க…

nathan

உண்மையான ஆண் மகன்களிடம் இருக்கும் 8 சிறந்த குணங்கள்!!!தெரிந்துகொள்வோமா?

nathan

உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.

nathan

பற்களை பாதுகாகும் மவுத் வாஷ்

nathan

இந்த 5 ராசி பெண்கள் இயற்கையாகவே அழகாக பிறந்தவர்களாம்…

nathan

3 சீக்ரெட்ஸ் – டயட். ஆக்டிவ். ரிலாக்ஸ்.

nathan