28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
8 1162
மருத்துவ குறிப்பு

சொரியாசிஸ்க்கு எளிய தீர்வு தரும் மருத்துவ முறைகள்…! இத படிங்க!

சொரியாசிஸ் என்பது தோலில், மீன் செதில் போன்று இறந்த செல்கள் உதிர்ந்து விழும் புரையுடன் கூடிய வெண்மை மற்றும் சிவப்பு திட்டுகளாக காணப்படும்.

இவை உடலின் எந்தப்பாகத்தில் வேண்டுமானாலும் வரலாம். முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் பொதுவாக பாதிக்கப்படும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சூரை, சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் ஆளி விதை, சூரிய காந்தி விதைகள் மற்றும் எள்ளு விதைகளில் ஏராளமாக உள்ளது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சொரியாசிஸ் நிலைமையை தீவிரமாக்காமல் குறைக்க உதவும்.

சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்.தோலைச் சொரிய கூடாது. ஹோமியோபதி மருந்துகள் வேலை செய்து விளைவுகள் தெரிய பல வாரங்கள் ஆகும். இதனால் சிகிச்சையை இடையில் நிறுத்த கூடாது.

மருந்துகளை தொடர்ந்து சீராக எடுத்துக் கொள்ள வேண்டும். தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், அரிப்பையும், புரை ஏற்படுவதையும் தடுக்கும். சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க் குருக்கள் உண்டாகும். இதனால் சொரியாசிஸ் தீவிரமடையும். ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

வீட்டு வைத்தியம்:

அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். இவை இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஊறிய பிறகு சீயக்காய் தூளுடன் கருஞ்சீரகம் தூள் கலந்து குளித்து வரவேண்டும். இந்த வைத்தியம் பக்க விளைவுகள் அற்றது.

தவிர்க்க வேண்டியவை:

சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள் இறைச்சி மற்றும் முட்டை மற்றும் ஆல்கஹால் குடித்தால், சாதாரணமானவர்களை விட சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்களின் இரத்தத்தில் ஆல்கஹால் அளவு மிகவும் அதிகமாகிவிடும். இதனால் கடுமையான அரிப்பை சந்திக்க நேரிடும்8 1162

Related posts

குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? பிரசவத்தின் போது ஏற்படுத்தும் விளைவுகள்…

nathan

தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி கையாள்வது?

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! நீரிழிவை விரட்ட தமிழர்கள் ஓலைச்சுவடியில் எழுதிவைத்த இயற்கை பொருள்கள்?

nathan

உங்களுக்கு தெரியுமா தைராய்டினால் ஏற்படும் எடை அதிகரிப்பை குறைக்க எளிய வழிமுறைகள்!

nathan

சிறுநீரகக் கல்லை கரைக்கும் எலுமிச்சை!!

nathan

தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் சுடுதண்ணீரில் குளித்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்… இது உண்மையா? பொய்யா?

nathan

காலை 8 மணிக்குள் இந்த விஷயங்களை கண்டிப்பா செய்து முடிங்க உங்க வாழ்க்கை சிறப்பு தான் பாஸ்!

nathan

மருத்துவர் கூறும் தகவல்கள்! பல் துலக்கும்போது நீங்க செய்யும் இந்த சிறு தவறு எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

nathan

வலிப்பு நோயை இயற்கையாக சரிசெய்ய முடியுமா? எப்படி செய்யலாம்?

nathan