28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
Screenshot 2019 03 26 சர்க்கரை வியாதி முதல் மாதாந்திர வலி வரைக்கு போக்கும் அற்புத பழம் Google Search
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! சர்க்கரை வியாதி முதல் மாதாந்திர வலி வரைக்கு போக்கும் அற்புத பழம் !

நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே இழந்தை பழம் சித்த மருத்துவத்தில் பெரும் பங்கு வகித்து வருகின்றது.

இலந்தைப்பழம் அதிகளவு மருத்துவ குணங்கள் நிறைந்தது.

இதில் கால்சியம், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், மற்றும் இரும்புச்சத்து, வைட்டமின் தாதுக்கள் நிறைந்துள்ளன.

இது உடலில் ஏற்படும் சர்க்கரை பாதிப்புகளை சரிசெய்வதில் இருந்து, ஞாபக மறதி, உடல் வலி, கைகால் மூட்டுகளில் ஏற்படும் வலிகள், வாந்தி தலைசுற்றல், கிறுகிறுப்பு மயக்கம், பெண்களின் மாதாந்திர விலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி, தலைவலி போக்கி, பெண்களின் மகப்பேறு அடைவதில் உள்ள கோளாறுகளை சரியாக்கி, அவர்களை விரைவில் தாய்மையடைய வைக்கும் தன்மை இதற்கு உண்டு.

தற்போது இந்த பழத்தில் உள்ள மருத்துவகுணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

60.90

  • இலந்தை. பத்து பதினைந்து இலந்தைப் பழங்களை தினமும் வெறுமனே சுவைத்து சாப்பிட்டுவர, அச்சம் அளித்த உடலின் சர்க்கரை அளவு அளவில் குறைந்து விடும். சரியான அளவில் இரத்தத்தில் சர்க்கரை அளவு வந்ததும், உணவுக் கட்டுப்பாட்டின் மூலம், சர்க்கரை பாதிப்பை நீக்கி, உடல் நலம் பெறமுடியும்.
  • இலந்தை, உடலில் பித்தம் எனும் சூட்டை சரியாக்கி, இன்சுலின் சுரப்பை அதிகரித்து, உடலின் சர்க்கரை அளவை இரத்தத்தில் சீராக்குகிறது. அத்துடன் சர்க்கரை பாதிப்பால் உடலில் ஏற்படும், சோர்வு, உடல் கைகால் வலிகளையும் போக்கி விடுகிறது, வெறுமனே இலந்தைப் பழங்களை சாப்பிட, தொண்டை கமருவது போல உணர்பவர்கள், சிறிது மிளகுத்தூளையும் உப்பையும் கலந்து சாப்பிட்டு வரலாம்.
  • இலந்தை இலை, மிளகு மற்றும் பூண்டு இவற்றை நன்கு அம்மியில் இட்டு அரைத்து, அதை உருண்டையாக்கி விழுங்கி விட, துடிக்க வைத்த வயிற்று வலிகள் எல்லாம் வினாடியில் மாயமாகி, நிம்மதி அடைவர். மேலும், அந்த சமயத்தில் ஏற்படும் தலைவலியும் நீங்கிவிடும்.
  • இலந்தை இலை, மிளகு, பூண்டு சேர்த்து அரைத்த விழுதை சாப்பிட்டு வர, குழந்தைப்பேறடைய முடியாத, கருப்பை பாதிப்பு உள்ள பெண்களின் கருப்பையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கருப்பையை வளமாக்கி, கருவை உருவாக்கும் ஆற்றலை ஏற்படுத்துகிறது.
  • இரவு உறங்கும் நேரங்களில், இலந்தை இலைகளை நன்கு அரைத்து, இரு உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் தடவிக் கொண்டு, காலையில், குளிக்கும் நீரில் இலந்தை இலைகளை இட்டு, சூடாக்கி குளித்து வர, கை கால்களில் ஏற்படும் வியர்வை மற்றும் வியர்வை துர்நாற்றங்கள், முழுமையாக விலகி விடும்.
  • கை அக்குள்களில் ஏற்படும் நாற்றத்தைப் போக்கவும் இலந்தை இளைச்சாற்றைப் பயன்படுத்தலாம்.
  • இலந்தை இலைகளை அரைத்து, தினமும் இருவேளை தயிரில் கலந்து பருகிவர, சூட்டினால் உண்டாகும் வயிற்றுக் கடுப்பு மற்றும் சீத பேதி குணமாகும்.
  • இலந்தை இலைகளை நன்கு அரைத்து சாறெடுத்து, தலையில் முழுவதும், முடி கொத்தாக உதிர்ந்த இடங்களிலும் தேய்த்து, ஊற வைத்து சிறிது நேரம் கழித்து, குளித்து வர, தலைமுடி உதிர்தல் நின்று, முடி கொத்தாக உதிர்ந்த இடங்களில் விரைவில், முடி வளர ஆரம்பிக்கும்.
  • இலந்தை மரத்தின் பட்டையை எடுத்து, சிறிது சூடான நீரில் கலக்கி இரவில் தினந்தோறும் பருகி வர, பசியின்மை கோளாறு நீங்கி, நன்கு பசியெடுக்க ஆரம்பிக்கும்.
  • இலந்தையில் இருந்து செய்யப்படும் தேநீர், பிரசித்தமானது. இந்தத் தேநீர், இரத்தத்தை சுத்திகரித்து, உடலுக்கு சுறுசுறுப்பையும் புத்துணர்வையும் ஊட்டுவதால், பலர் இலந்தைத் தேநீரைப் பருகி, நலமடைகின்றனர்.

Related posts

பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிள் மட்டுமில்ல, ஒரு பீர் குடிச்சாலும் நல்லதாமா!!!

nathan

ஆரோக்கியமற்ற உணவை நிராகரிக்க உங்கள் மூளையை பழக்க இதோ சில வழிகள்!….

sangika

தெரிஞ்சிக்கங்க…உங்க சிறுநீரகங்களை பாதுகாக்க இந்த 7 உணவுகள் போதுமாம்..!

nathan

எடை குறைய வெந்தயம் சாப்பிடுங்க!

nathan

தினமும் அரிசி சமையல் மட்டும் போதுமா?

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான சர்க்கரை குறைவாக உள்ள 12 ருசியான உணவுகள்!!! நீங்களும் முயற்சி செய்யுங்கள் ..

nathan

தினமும் காலை உணவாக இட்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

புற்றுநோயை அழிக்கும் 30 உணவுகள்!

nathan