24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
foodsyoushouldneverstoretogether1 1549264854
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா வீட்டில் வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒரே இடத்தில் ஏன் வைக்க கூடாது? மீறி வைத்தால்..!?

பொதுவாக வீடுகளில் சில உணவுங்களை ஒன்றாக சேர்த்து வைக்க கூடாது என்று சொல்வார்கள். இதை பல நேரங்களில் மூட நம்பிக்கை என்று நினைத்து கொண்டு செய்யாமலே இருப்போம். ஆனால், நம் முன்னோர்கள் சொல்லி சென்ற சில விஷயங்களில் அறிவியல் பார்வையும் உள்ளது என இன்றைய ஆய்வுகள் சொல்கின்றன.

மனிதன் உயிர் வாழ தேவையானது உணவு தான். ஆனால், இதில் கூட நமக்கு சில பாதிப்புகள் உண்டு என்பதை உருளைக்கிழங்கும் வெங்காயமும் சொல்லி விடுகின்றன. பெரும்பாலும் வீடுகளில் காய்கறிகளை அப்படியே வைத்து விடுவார்கள். இது போன்ற நிலை தான் நமக்கு பாதிப்பை தருகிறது. இந்த பதிவில் வீட்டில் எப்படிப்பட்ட உணவுகளை ஒன்றாக வைத்தால் தீங்குகள் நமக்கு உண்டாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

வாழைப்பழம் எப்போதுமே வாழைப்பழத்தை தனியான இடத்தில் தான் வைக்க வேண்டும். ஏனெனில், வாழையின் தட்பவெப்பத்திற்கு மற்ற உணவுகள் தாக்கு பிடிக்காது. காரணம், வாழைப்பழம் எத்திலீன் என்கிற வாயுவை வெளியிடுகிறது. எனவே இதன் அருகில் மற்ற உணவுங்களை வைத்தால் அவையும் பாதிக்கப்படும்.

திராட்சை பழங்களை பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகளிலோ அல்லது பிளாஸ்டிக் பாத்திரங்களிலோ வைப்பது நல்லதல்ல. அவ்வாறு செய்தால் அவை வேதி தன்மை பெற்று விட கூடும். குறிப்பாக திராட்சையை ஒரு போதும் பிளாஸ்டிக் பைகளில் வைக்காதீர்கள். துணி பைகளில் வைப்பது சிறந்தது.

ஆரஞ்சும் ஆப்பிளும் பல இடங்களில் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சை சேர்த்து ஒரே இடத்தில் வைத்திருப்பது போன்ற படங்களை நாம் பாத்திருப்போம். ஆனால், இதனை சேர்த்து வைப்பது எதிர் எதிர் வினைகளை உண்டாக்கி விடும். இதை சமையல் அறையில் வைத்தாலும், அல்லது ஃபிரிட்ஜில் வைத்தாலும் இவை இரண்டுமே மோசமான விளைவை ஏற்படுத்தும்.

மூலிகைகள் சில வீடுகளில் மூலிகைகளை அப்படியே வைத்து விடுவார்கள். இது போன்ற பழக்கம் மூலிகை தன்மையை இழக்க செய்து விடும். உதாரணத்திற்கு துளசி, தூதுவளை, குப்பைமேனி போன்ற மூலிகைகளை நாம் அப்படியே வைப்பது நல்லதல்ல. இதற்கு மாறாக அதன் தேவையற்ற பகுதிகளை நீக்கி நீர் கலந்த ஜாடியில் வைத்து பராமரித்தால் 2 வாரம் வரை அதன் தன்மை மாறாது.

வெள்ளரிக்காய் வீடுகளில் தக்காளி, வாழைப்பழம், எலுமிச்சை போன்ற உணவுகளில் எத்திலீன் என்கிற வாயு உற்பத்தியாகும். ஆதலால், இவை மிக விரைவிலே கெட்டு போய் விடும். அந்த வகையில் வெள்ளரிக்காயும் எத்திலீன் வாயுவை அதிகம் உற்பத்தி செய்ய கூடிய ஒன்றுதான். எனவே, வீட்டில் வெள்ளரிக்காயுடன் வேறு எந்தவித உணவுகளையும் சேர்த்து வைக்காதீர்கள். மீறி வைத்தால் இவற்றின் தன்மை மாறி விடும்.

ஆப்பிள் பெரும்பாலும் ஆப்பிளை தனியான இடத்திலே வைக்க வேண்டும். பூசணி போன்றவற்றை இதன் பக்கத்தில் கூட வைக்க கூடாதாம். ஏனெனில், இவ்வாறு செய்வதால் ஆப்பிள் அதன் தட்பவெப்பத்தை மீறி சீக்கிரமே கெட்டு போய் விடுமாம்.

வெங்காயமும் உருளையும் பொதுவாக ஒரே வித சூழலில் வளர்ந்த உணவுகளை ஒரே இடத்தில் பராமரிப்பது நல்லதல்ல. குறிப்பாக வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு, இவை இரண்டுமே மண்ணிற்கு கீழ் வளர கூடிய வேர் தாவரங்கள். ஆதலால் இவற்றை ஒரே இடத்தில் வைப்பதால் மிக விரைவிலே அதன் தன்மை திரிந்து கேட்டு போய் விடும்.

வேறென்ன வைக்கலாம்..? வெங்காயத்தின் சிறந்த நண்பனான பூண்டை இதனுடன் சேர்த்து வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். மேலும், எப்போதுமே இது போன்ற வேர் தாவரங்களான கேரட், கருணை கிழங்கு, பீட்ரூட் போன்றவற்றை இருட்டு அதிகம் உள்ள இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் அதன் தன்மை அப்படியே இருக்கும்.

தக்காளி எப்போதுமே ஒரு சில உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்க கூடாது என்கிற வரையறை உள்ளது. குறிப்பாக தக்காளியை சொல்லலாம். இதனை ஃபிரிட்ஜில் வைப்பதால் இதன் சுவையும் மணமும் முழுவதுமாக மாறி விடும் என ஆய்வுகள் சொல்கின்றன. ஃபிரிட்ஜில் வைக்காத தக்காளிகளே அதிக சுவையும் ஆரோக்கியமும் கொண்டவையே உள்ளன.

முட்டை முட்டை போன்ற பொருட்களை வெளியில் வைப்பதை விட ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது. ஏனெனில், இவற்றில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஃபிரிட்ஜில் வைப்பதால் குறைக்கப்படுகிறது. ஆதலால், முட்டை போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிடுவது சிறந்தது.

foodsyoushouldneverstoretogether1 1549264854

Source :boldsky

Related posts

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வைரஸ் தொற்றைத் தடுக்கலாம்!

nathan

மணத்தக்காளிக்காய்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வெங்காயம் உரிக்கும் போது இதை செய்தால் கண்ணீரே வராதாம்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நீங்கள் விரும்பி சாப்பிடும் இந்த ஆரோக்கிய உணவுகள் உண்மையில் உங்கள் எடையை அதிகரிக்குமாம்!

nathan

குழந்தைகளுக்கு தரலாமா சத்து மாவு?

nathan

இடுப்பைச் சுற்றியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்.சூப்பர் டிப்ஸ்

nathan

பாலுடன் இந்த பொருட்களை கலந்து குடிப்பதால் இவ்வளவு நன்மையா?தெரிஞ்சிக்கங்க…

nathan

நெருஞ்சில் பொடி – nerunjil powder benefits in tamil

nathan

ஜங்க் உணவுகள் உட்கொள்வது கருத்தரிப்பை பாதிக்குமா?

nathan