23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
pregnent1
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவுஆரோக்கியம் குறிப்புகள்கர்ப்பிணி பெண்களுக்கு

இந்த மாதிரியான உணவுகளை பச்சையாக சாப்பிடக் கூடாதாம்!…

உணவுகள் என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று . ஆனால் சில அதே உணவுகளை நாம் பச்சையாக சாப்பிடும் போது நமக்கு நிறைய ஆபத்துகள் வருவது நிச்சயம் என்கின்றனர்.

பச்சையாக சாப்பிடும் போது அதிலுள்ள சில தீங்கு விளைவிக்கும் பொருட்கள் நம் உடல் நலத்தை கெடுத்து உயிருக்கே உலை வைத்து விடும் என்று எச்சரிக்கை விடுவிக்கின்றனர் மருத்துவர்கள்.

அந்த வகையில் எந்த மாதிரியான உணவுகளை பச்சையாக சாப்பிடக் கூடாது என்று நாம் பார்க்கலாம். அதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதையும் நாம் காணலாம்.

ஆபத்து

மீன்கள், காய்கறிகள் மற்றும் அவகேடா போன்றவற்றில் நிறைய விட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன.

ஆனால் அதே நேரத்தில் இந்த உணவுகளில் பாக்டீரியா, பாராசைட்ஸ் மற்றும் அனசாகியாஸ் போன்ற ஒட்டுண்ணிகளும் இருக்கின்றன.

இதனால் வாந்தி, வயிற்று போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற விளைவுகள் ஏற்படலாம்.

pregnent1

கருவுற்ற தாய்மார்கள்

குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போன்றவர்கள் உணவை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதை தவிருங்கள்.

இவர்கள் அதிக அளவு மீன்களை எடுக்க வேண்டாம். ஏனெனில் இதில் அதிக அளவு மெர்குரி இருக்க வாய்ப்புள்ளது.

பன்றி இறைச்சி

பச்சையாக இருக்கின்ற பன்றி இறைச்சியில் சால்மோனெல்லா, ஈகோலி மற்றும் லிஸ்டெரியா போன்ற பாக்டீரியா க்கள் இருக்கின்றன.

சமைக்காத பன்றி இறைச்சியை தொட்ட கத்தியில், பாத்திரத்தில் கூட இந்த ஒட்டுண்ணிகள் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.

கண்டிப்பாக பன்றி இறைச்சியை 145 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் 3 நிமிடங்கள் சமைத்து சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் இந்த ஒட்டுண்ணிகள் அழிய வாய்ப்புள்ளது.

சிப்பிகள்

இந்த சிப்பிகள் தண்ணீரில் இருப்பதால் இதில் நிறைய பாக்டீரியாக்கள், வைரஸ்கள் வாழ்கின்றன.

இதை நீங்கள் சமைக்காமல் சாப்பிடும் போது அதையும் சேர்த்து தான் சாப்பிடுகிறீர்கள். இது வைபிரோஸிஸ் என்ற தொற்றை பரப்புகிறது.

மேலும் இது ஹெபடைடிஸ் ஏ வைரஸை பரப்பி கல்லீரல் நோயை ஏற்படுத்துகிறது. எனவே சிப்பிகளை நன்றாக சமைத்து சாப்பிடுங்கள்.

கெவிட்சி உணவுகள்

கெவிட்சி என்பது மீனை சமைக்காமல் அப்படியே எலும்பிச்சை ஜூஸ் பிழிந்து சாப்பிடும் ஒரு வகை உணவு. இதிலுள்ள பாக்டீரியா மற்றும் பாராசைட்ஸ் போன்றவை உணவை நஞ்சாக்குகிறது.

எனவே இந்த மாதிரியான உணவுகளை கருவுற்ற மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்கள் தவிர்ப்பது நல்லது.

கண்டிப்பாக கடல் வகை மீன்களை 145 டிகிரி பாரன்ஹீட்டில் வைத்து சமைக்க வேண்டும். 16 5 டிகிரி பாரன்ஹீட் வரை கூட நீங்கள் சமைக்கலாம்.

அரைத்த மாமிசம்

எல்லாருக்கும் மட்டன் என்றால் பிடிக்காமல் இருக்காது. அதிலும் அதை கொத்து கறி போட்டு பச்சையாக சில பேர் சாப்பிடுகிறார்கள்.

இதுவும் ஃபுட் பாய்சனிங் ஏற்பட காரணமாகிறது. ஏனெனில் இதில் ஈகோலி பாக்டீரியா, சால்மோனெல்லா போன்றவை இருந்து நம் உடல் நலத்திற்கு தொல்லை கொடுக்கிறது.

முட்டை

சமைக்காத முட்டையில் சால்மோனெல்லா உள்ளது. எனவே முடிந்த வரை முட்டையை சமைத்து சாப்பிடுவது தான் நல்லது.

ப்ரிட்ஜில் வைக்கப்பட்ட முட்டையை கூட குளிர் போன பிறகு சமைத்து சாப்பிடுங்கள். ீசர் டிரஸ்ஸிங் அல்லது ஹல்லண்டிசைஸ் சாஸ் போன்ற டிஷ்களில் கூட முட்டையை சமைத்து சாப்பிடுங்கள்.

மாவுப்பொருட்கள்

மாவு வகைகளை சமைத்து சாப்பிடுவது தான் நல்லது. அப்படியே சாப்பிடும் போது ஈ கோலி பாக்டீரியா வயிற்றுக்குள் நுழைந்து வயிற்று போக்கு, வாந்தியை ஏற்படுத்துகிறது.

குழந்தைகள் மாவை வைத்து விளையாடினால் கூட கைகளை நன்றாக சுத்தம் செய்ய சொல்லுங்கள்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் பச்சையாக தென்பட்டால் சாப்பிடாதீர்கள். ஏனெனில் அது சோலனைன் என்ற நஞ்சை குறிக்கிறது. இதனால் வயிற்று போக்கு, காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்றவை ஏற்படும்.

எனவே இந்த பச்சை பாகத்தை வெட்டி விட்டு கைகளை நன்றாக கழுவி விட்டு சமையுங்கள். அதே மாதிரி இை பச்சையாக சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

பீன்ஸ்

பீன்ஸ் யை பச்சையாக சாப்பிடுவது நல்லது கிடையாது. அதில் பீன் லேக்டின் என்ற புரோட்டீன் இருக்கிறது. இதை சமைக்கும் போது அது அழிந்து விடும். அதுவே நீங்கள் அதை சமைக்காமல் சாப்பிடும் போது உடம்புக்கு கேடு விளைவிக்கிறது.

எனவே பீன்ஸை 5 மணி நேரம் ஊற வைத்து 30 நிமிடங்கள் கொதிக்க வைத்து வேக வைத்து சாப்பிடுங்கள்

லிமா பீன்ஸ்

சில தாவரங்களில் இயற்கையாகவே சயனைடு இருக்கும் அந்த வகையில் லிமா பீன்ஸில் இந்த சயனைடு காணப்படுகிறது. எனவே இந்த பீன்ஸை இரவில் 2 மணி நேரம் ஊற வைத்து பிறகு சமைத்து சாப்பிடுங்கள்.

கசப்பு பாதாம்

கசப்பு பாதாமிலும் சயனைடு உள்ளது. அமெரிக்க போன்ற நாடுகளில் இதன் விற்பனையை தடை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இனிப்பு பாதாம் பருப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

காட்டு காளான்

அரிரிடின் மற்றும் அமடாக்ஸின் போன்ற காளான்கள் நச்சுக்களை கொண்டுள்ளது. இது நமது கல்லீரலை பாதித்து பெரிய உடல் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.

இது வாந்தி, வயிற்று போக்கு, வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைத்து விடும். எனவே இதை தவிர்ப்பது நல்லது.

சேப்பன் கிழக்கு

சேப்பன் கிழங்கை சமைக்காமல் சாப்பிடும் போது அதிலுள்ள ஆக்ஸிலேட்ஸ் வீக்கத்தையும் எரிச்சலையும் உண்டாக்குகிறது.

இது உதடுகள், வாய் மற்றும் தொண்டை பகுதியில் நமைச்சலை ஏற்படுத்தும். எனவே இதை பால் விட்டு சமைக்கும் போது இதன் வீரியம் குறையும்.

ஆமணக்கு கொட்டை

ஆமணக்கு கொட்டையை வெறுமனே வாயில் போட்டு மெல்லுதல் நல்லது கிடையாது. இதிலுள்ள ரிச்சின் என்ற நச்சு உடல் நலத்தை பாதிக்க ஆரம்பித்து விடும்.

மரவள்ளி கிழங்கு

மரவள்ளி கிழங்கின் வேர்களிலும் இந்த சயனைடு காணப்படுகிறது. எனவே இந்த கிழங்கை நன்றாக சமைத்து சாப்பிடுவது மட்டுமே சிறந்தது. சமைக்காமல் சாப்பிட்டால் வயிற்று போக்கு, வயிற்று வலி, வாந்தி ஏற்படக் கூடும்.

ரூபார்ப் இலைகள் (பேதி மருந்து செடி)

இந்த இலைகள் சாப்பிடுவதற்கு பாதுகாப்பான ஒன்று தான். ஆனால் இந்த இலைகளில் ஆக்ஸாலிக் அமிலம் போன்ற நச்சுக்கள் உள்ளன.

எனவே இதை சமைக்காமல் சாப்பிடும் போது வாயில் எரிச்சல், மூச்சு விட சிரமம், வயிற்று போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படும். எனவே இந்த மாதிரியான உணவுகளை சமைத்து சாப்பிடுவதே நல்லது. அதுவே நம் உடல் நலத்தை காக்கும்.

Related posts

நீங்க இந்த பானம் குடிப்பதால் உங்க குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுமாம்…!

nathan

அதிக பேராசைக் கொண்ட ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

முருங்கையின் ஒவ்வொரு பாகமும் அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டது!!

nathan

கீரை, பருப்பு கிச்சடி எப்படி செய்வது?….

sangika

ஏலக்காய் வியக்க வைக்கும் சமையல் மந்திரங்கள்.

nathan

இந்த 5 ராசிக்காரங்கள யாராலையும் ஏமாத்த முடியாதாம்… அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

தெரிஞ்சிக்கங்க…அசிங்கமா தொங்கும் பானை வயிறு ஒரே நாளில் மாயமாகனுமா? வெந்நீரில் இந்த சக்திவாய்ந்த பொருளை கலந்து வெறும் வயிற்றில் குடிங்க!

nathan

தினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

பெண்களே இறுக்கான உடை அணிவதை தவிருங்கள்

nathan