செரிமானம்
உங்களை மீண்டும் காப்பாற்றுவது பைபர்னைன் தான். இறகு இரைப்பைக்கு செரிமானத்தை தூண்டும் அமிலங்களை அதிகம் சுரக்கும் படி செய்கிறது. மேலும் இது கணையத்தில் செரிமான நொதிகளையும் அதிகம் சுரக்கும்படி செய்கிறது. இது உமிழ்நீரின் சுரப்பை அதிகரிக்கிறது. மிளகுடன் சேர்த்து சாப்பிடும் போது உங்களுக்கு உணவில் இருந்து ஆற்றல் விரைவாக கிடைக்கும்.
எடை குறைப்பு
கருப்பு மிளகின் மேலே இருக்கும் படலமானது பைட்டோநியூட்ரியன்ட்களால் நிறைந்தது. இது கொழுப்பு செல்களை கரைத்து உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். இது உங்கள் உடலின் வெப்பத்தை தற்காலிகமாக அதிகரிப்பதால் உங்கள் உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படும். தினமும் உங்கள் உணவில் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்துக் கொள்வது நீங்கள் எதிர்ப்பார்க்காத பலன்களை கொடுக்கும். அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால் உடல் எடை வேகமாக குறையும்.
சரும ஆரோக்கியம்
மிளகு உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடும். அதற்காக மிளகை நேரடியாக உங்கள் சருமத்தில் தேய்க்கக்கூடாது. நீங்கள் சருமத்திற்கு உபயோகிக்கும் பொருட்களில் சிறிது மிளகை கலந்து உங்கள் சருமத்தில் பூசவும். மேலும் தினமும் மிளகு சாப்பிடும்போது அது உங்களுக்கு வயதாவதையும், முகத்தில் சுருக்கம்ப்கால் ஏற்படுவதையும் குறைக்கும்.
ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச
ஆரோக்கிய உணவுகளில் இருந்து கிடைக்கும் மொத்த ஊட்டச்சத்துக்களும் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்று ஆசை இருக்கிறதா? அப்படியென்றால் உங்கள் உணவில் தினமும் மிளகாய் சேர்த்து கொள்ள மறந்துவிடாதீர்கள். இது உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவும். மிளகு தொடர்ந்து உட்கொள்ளப்படும்போது உங்கள் உடலுக்கு வைட்டமின் பி, வைட்டமின் சி, செலினியம், பீட்டா கரோட்டின் போன்றவை கிடைக்கும்.
பல் ஆரோக்கியம்
பைபர்னைன் உடல் முழுவதும் ஏற்படும் வீக்கத்தை குறைக்கக்கூடும், அதன்படி இது ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதுடன் உங்கள் தாடைகளில் ஏற்படும் பிரச்சினைகளையும் குறைக்கும். இதனை நேரடியாக உங்கள் ஈறுகளில் உபயோகிக்காதீர்கள், கிராம்பு எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து வலி உள்ள இடத்தில வைத்தால் விரைவில் பல் வலி குணமாகும்.
புற்றுநோயை தடுக்கும்
கருப்பு மிளகு அளிக்கும் மிகப்பெரிய நன்மை என்னவெனில் இது புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்கும். கருப்பு மிளகில் பைபர்னைன் என்னும் பொருள் உள்ளது. பைபர்னைன் புற்றுநோய் ஏற்படுத்துவதற்கான ஆபத்தை இருமடங்கு குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. அதிலும் மஞ்சளுடன் சேர்த்து சாப்பிடும்போது இதன் பலன் அதிகமாக இருக்கும். மஞ்சளில் உள்ள குர்குமின் ஆனது நமது உடல் மிளகில் இருக்கும் பைபர்னை உறிஞ்சுவதற்கு மிகவும் அவசியமாகும். மேலும் மிளகில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கரோட்டின் போன்ற சத்துக்களும் உள்ளது. இவை அனைத்தும் உங்கள் உடலில் இருக்கும் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
அறிவாற்றல்
ஆய்வுகளின் படி பைபர்னைன் உங்களுடைய அறிவாற்றல் இழப்பு மற்றும் நினைவாற்றல் குறைவதை தடுக்கும். இது மூளைக்கான வேதியியல் பாதையை சீராக்குவதன் மூலம் உங்கள் மூளையை நன்கு செய்லபட வைக்கிறது. வயதாவதால் ஏற்படும் மறதி, அல்சைமர், மூளைக்கோளாறுகள் போன்றவற்றை சரிசெய்ய தினமும் உணவில் சிறிது மிளகு சேர்த்து கொள்வது நல்லதாகும்.