36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவது குறைய

தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால், பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும். எண்ணை பசை குறைந்து புத்துணர்ச்சி அளிக்கும்.

வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும் இதை தொடர்ந்து ஒரு மாத காலமாவது பின்பற்ற வேண்டும்.

வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம்.

அப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும். 

எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்துக்கு முல்தானிமெட்டியுடன் சிறிதளவு பன்னீர் கலந்து முகத்தில் தடவலாம். 

பாதாம் பருப்பை கஸ்தூரி மஞ்சளுடன் சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தடவிவந்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. 

தக்காளிச்சாறு, வெள்ளரிக்காய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து, வேகவைத்து ஆறியதும் சிறிதளவு தயிர் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பொலிவுபெறும். 

உருளைகிழங்கையும் பச்சையாக அரைத்து முகத்தில் பூசினாலும் எண்ணெய் பசை மாறி முகம் பொலிவாக இருக்கும்.

படுக்கும் போது சந்தனத்தைக் குழைத்து முகத்தில் தடவிக் காலையில் எழுந்திருக்கும் போது பன்னீரால் முகத்தைக் கழுவவும். எண்ணெய் பசையுள்ள முகம் பளபளப்புடன் இருக்கும். 

முகத்தில் எண்ணெய் வடிவதைப் போக்க, ஐஸ் கட்டியை மெல்லிய துணியில் வைத்துக் கட்டி, முகத்தில் காலை, மாலை ஒற்றி வந்தால் எண்ணெய் வடிவது மாறி விடும். 

வேப்ப இலை, புதினா இலை, மஞ்சள் மூன்றையும் வைத்து நன்றாக மை போல் அரைத்து முகம் முழுவதும் பத்துப்போல சீராகப் போட வேண்டும். தினமும் இரவில் படுக்கப் போகும் போது கிளிசரின் தடவிக் கொண்டால், எண்ணெய்ப் பசை நீங்கி முகம் மிருதுவாகும். 

தக்காளி, பப்பாளிச் சாறெடுத்து தினமும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும்.

எண்ணெய் பசை சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும். 

எண்ணெய்ப் பசை சருமத்தினர், வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.

எண்ணெய் பசை சருமம் உள்ள வர்கள், மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும்.

Related posts

இதை நீங்களே பாருங்க.! அழகு தமிழில் பின்னியெடுக்கும் வெள்ளைக்கார தாத்தா!

nathan

மனைவி தன்னை ஏமாற்றியதாக பேசினாரா நடிகர் தனுஷ் !

nathan

இந்த 2 பொருட்கள் முகத்தில் உள்ள சுருக்கத்தை மாயமாய் மறையச் செய்யும் என்பது தெரியுமா?

nathan

முக அழகை முத்தாக பராமரிக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

பனிக்கால சரும பாதுகாப்பு முறைகள்

nathan

ஆரஞ்சு தோல் கொண்டு அழகை அதிகப்படுத்த ரகசிய குறிப்புகள்!!

nathan

உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்…நீங்களும் முயற்சி செய்யுங்கள்

nathan

கன்னத்தை பளபளப்பாக்கும் அழகு குறிப்புகள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான தக்காளி ஆலிவ் சாலட்

nathan