26 C
Chennai
Wednesday, Feb 26, 2025
thajir
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

தூக்கம் நன்றாக வர தயிரை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

நாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் யோகட் என்று அழைக்கப்படுகிறது.
ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல்நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்டவை. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

thajir

தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் எடுத்துக் கொள்ளலாம். அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயத்துடன் தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளை சாப்பிடும் பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் சாப்பிடுகிறோம்.

மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும். புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு கரண்டி தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

Related posts

2-3 மணி நேரத்தில் கெட்டித் தயிர் செய்ய ஒரு சுலபமான வழி.

nathan

எப்படியெல்லாம் உடலை கச்சிதமான அமைப்புடன் வைத்து கொள்ளலாம்….

sangika

சுவையான கேரட் எலுமிச்சை சாதம்

nathan

பதின்ம பருவம் பெண்களுக்கான ஆரோக்கிய குறிப்புகள்

nathan

எடைக் குறைப்பு என்று வந்தால் ஏற்ற முறை

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் உஷ்ணத்தை தணித்து, குடல் புண்களை ஆற்றும் நெய்

nathan

இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் …..

sangika

வீட்டில் ஈ தொல்லை அதிகமாக இருக்கின்றதா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு தெரியுமா உடல் எடையை கிடுகிடுனு குறைக்கும் கருப்பு உருண்டை!

nathan