காலை உணவு தவிர்ப்பது
காலை உணவு என்பது நம்முடைய முழு நாளின் உணவில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. காலை உணவைத் தவிர்த்தாலோ அல்லது மிகக் குறைவாக தேவைப்படுகிற கலோரியை விட குறைவாகச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பது, உடல் சோர்வு போன்ற பல பிரச்சினைகள் உடல் சார்ந்தும் மனம் சார்ந்தும் ஏற்படுகிறது. குறிப்பாக, உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது.
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றின்படி, தினசரி காலை உணவாக 500 கலோரிகள் உணவு எடுத்துக் கொள்பவர்களை விடவும் 300 கலோரிகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன.
வயிறு நிரம்ப காலை உணவு சாப்பிடுகின்றவர்களுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவும் இன்சுலின் அளவும் மிகக் குறைந்த அளவிலேயே சுரக்கிறது.
இது உடனடியாக பசி எடுப்பதையும் கட்டுப்படுத்துகிறது. அதனால் தான் காலை உணவை நிறைவாகச் சாப்பிட வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
போதிய தூக்கமின்மை
நம்முடைய உடலுக்குத் தேவையான போதிய தூக்கம் இல்லாமல் இருந்தாலும் அகோரப் பசி வந்து உங்களை வாட்டும்.
அறிவியல் முறைப்படி, எப்போது நாம் சரியாகத் தூங்கவில்லையோ அந்த சமயங்களில் பசி மற்றும் திருப்தியின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகிற ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன.
நம்முடைய உயிர்வேதியியல் மாற்றங்களால் அது வழக்கத்தை விடவும் அதிகமாகச் சாப்பிட வேண்டும் என்று நம்மைக் கேட்கும்.
உடல் தேவை
வயிறு பசிக்கிறது என்று நாம் சொல்வோம். அதையும் தாண்டி சில சமயங்களில் நம்முடைய உடல் நம்மிடம் அதிகமாக உணவைக் கேட்கும். அதிலும் குறிப்பாக, நம்முடைய உடலில் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு குறைகின்ற பொழுது, உடல் நம்மிடம் அந்த குளுக்கோஸின் தேவையை நிறைவு செய்யச் சொல்லி கேட்கும். அதனால் நமக்கு பசி உண்டாகிறது.
அதனால் தான் மூன்று வேளையாகச் சாப்பிடாமல், நல்ல ஊட்டச்சத்தான உணவுகளையும் இடையிடையே ஆரோக்கியம் நிறைந்த சிற்றுண்டிகளையும் அன்றைய நாள் முழுக்க குறிப்பிட்ட இடைவெளியில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதோடு உங்களுடைய உணவில் நல்ல ஆரோக்கியமான நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகப்படுத்துவது நல்லது. அது குறிப்பாக, நடு இரவில் ஏற்படுகிற பசியைக் கட்டுப்படுத்தும்.
போதிய தண்ணீர் குடிக்காமை
பெரும்பாலனவர்களுக்கு இந்த பிரச்சினை இருக்கிறது. நம்முடைய உடல் எப்போதெல்லாம் நீர்ச்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கிறதோ அப்போது, அதன் தேவையை நிறைவு செய்து கொள்ளும் ஒரு வழியாகத் தான் அகோரப் பசியை உண்டாக்குகிறது.
நம்முடைய உடல் நீர்ச்சத்தை இழக்க ஆரம்பிக்கிற போதெல்லாம் நம்முடைய மூளையில் உள்ள ஹைப்போதாலமஸ் பகுதி தண்ணீர் மற்றும் உணவுத் தேவைக்கான சிக்னலை நமக்குக் கொடுக்கிறது.
ஏதாவது சாப்பிடுங்கள் என்று நம்மை அறிவுறுத்துகிறது. இந்த சமயத்தில் உங்களுக்குப் பசிப்பது போல் இருந்தாலும் கூட, உங்களுக்குத் தேவைப்படுவது தண்ணீர் தான்.
அதனால் எது வயிற்றுப் பசி. எது நீர்ச்சத்துப் பற்றாக்குறையால் ஏற்படுகிற பசி என்பதை உணர்ந்து நிறைய தண்ணீர் குடியுங்கள்.
மன அழுத்தம்
மன அழுத்தத்துக்கும் பசிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். சிலரைப் பார்த்திருப்பீர்கள். விரக்தியிலோ அல்லது கோபத்தில் இருக்கும்போது தான் நிறைய சாப்பிடுவார்கள்.
மன அழுத்தத்தில் இருக்கிற பொழுது நம்முடைய உடல் கார்ட்டிசோல் மற்றும் அட்ரீனலின் ஆகிய ஹார்மோன்களைச் சுரக்கும்.
இந்த ஹார்மோன்கள் பல்வேறு காரணங்களுக்காக நம்முடலில் சுரக்கும். இதற்கான காரணத்தை நம்மால் பெரிதாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதனால் இறுதியில் அது பசியாக உருவெடுத்துவிடுகிறது.
சாப்பிட்டு கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் பசிப்பது போல உணர்வதற்கு மேற்கண்ட ஐந்து விஷயங்களும் தான் காரணம் என்பதை புரிந்து கொண்டு.
உடலின் தேவையை சரியாக முறைப்படுத்தினாலே இந்த மாதிரியான பிரச்சினைகள் தீர்ந்து போகும்.