22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
aththipalam1
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

கொடுக்கப்பட்டுள்ள அருமருந்தால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்!…

தற்போதைய மோசமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால், நம் உடலில் பாக்டீரியாக்கள் அதிகம் சேர்வதோடு, அதன் வளர்ச்சியும் அதிகரிக்கிறது. இப்படி உடலில் பாக்டீரியாக்கள் அதிகமாகும் போது, பல்வேறு நோய்களால் அவஸ்தைப்படுவதோடு, அவற்றை நீக்கும் சிகிச்சை கடினமாக இருக்கும்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அருமருந்தால் கிடைக்கும் நன்மைகளோ ஏராளம். இங்கு அந்த அருமருந்து குறித்தும், அவற்றை உட்கொள்வதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…

aththipalam1

மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்:

உலர்ந்த அத்திப்பழம் – 40 துண்டுகள்
ஆலிவ் ஆயில்

தயாரிக்கும் முறை:

முதலில் உலர்ந்த அத்திப்பழத்தை ஒரு குடுவையில் போட்டு, அதில் ஆலிவ் ஆயிலை குடுவை முழுவதும் நிரப்ப வேண்டும்.

பின் அந்த குடுவையை மூடி வைத்து, 40 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.
பிறகு அந்த அத்திப்பழத்தை தினமும் உணவு உட்கொள்ளும் முன் சாப்பிட வேண்டும்.

பாக்டீரியாக்கள் அழியும்

ஆலிவ் ஆயிலில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிட்டால், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் அழிக்கப்பட்டு, வெளியேற்றப்படும்.

கால்சியம்

அத்திப்பழத்தில் பால் பொருட்களுக்கு இணையான அளவில் கால்சியம் உள்ளது. எனவே பால் பொருட்கள் சேராதவர்கள், அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், கால்சியம் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

எடை குறைவு

அத்திப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வர, உடல் எடை குறைவது தூண்டப்படும்.

இரத்த அழுத்தம் குறையும்

அத்திப்பழத்தில் பொட்டாசியம் வளமாக உள்ளது. இச்சத்து இரத்த அழுத்தத்தை சீராக்கி, உடலின் இதர முக்கிய செயல்பாடுகளுக்கும் உதவும். மேலும் இதில் உள்ள ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் கரோனரி இதய நோயில் இருந்து பாதுகாக்கும்.

இதர நன்மைகள்

ஆலிவ் ஆயிலில் ஊற வைத்த அத்திப்பழத்தை சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல், உயர் கொலஸ்ட்ரால், இரத்த சோகை, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் மலட்டுத்தன்மை பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்

Related posts

milky white discharge reason in tamil – வெள்ளை வெளியேற்றம்

nathan

நீங்கள் வாங்கும் முட்டை காலாவதியானதா…

nathan

இந்த முத்திரையை செய்வதால் முறையற்ற சுவாசம் சரியாகும்…….

sangika

வெள்ளைப்படுதல் அதிகமா இருக்கா? இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

nathan

ஊதுவர்த்தியால் உடலுக்கு உண்டாகும் ஆபத்தான விளைவுகள்

nathan

நாப்கினுக்கு குட்பை!

nathan

இத படிங்க கர்ப்பிணிகளே பற்களை பராமரிப்பதில் அலட்சியம் வேண்டாம்…

nathan

இந்த 5 ராசிக்காரங்களுக்கு முதலாளியா இருக்க கொஞ்சம் கூட தகுதி இருக்காதாம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிறந்த குழந்தைக்கு போதுமான நீர்ச்சத்து இல்லாவிட்டால் வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகள்!

nathan