நீங்கள் தூங்கும் போது வரும் கனவில் உங்கள் வீடு முழுவதும் மற்றும் உங்கள் கட்டிலை சுற்றிலும் மூட்டை பூச்சி அட்டகாசம் இருந்தால் எப்படி இருக்கும் . கண்டிப்பாக அதற்கு அப்புறம் உங்களால் நிம்மதியாக தூங்க முடியாது அல்லவா. இந்த வகை பூச்சிகள் இரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழும் குடும்பத்தை சார்ந்தவை .
இது பார்ப்பதற்கு நல்ல நீள் வட்ட வடிவில் சிறிய அளவில் பிரவுன் கலரில் காணப்படும். இதன் ஓரே உணவு நமது இரத்தம் மட்டுமே. பொதுவாக காணப்படும் மூட்டை பூச்சிகள் சிமெஷ் லாக்டுலாரிஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி தனது பசியை நிவர்த்தி செய்து கொள்கிறது.
இந்த மூட்டை பூச்சிகள் இரவு நேரங்களில் தான் ரெம்ப சுறுசுறுப்பாக செயல்படும். இந்த மூட்டை பூச்சியின் முட்டைகள் பார்ப்பதற்கு ஒரு சிறிய புள்ளி மாதிரி தான் இருக்கும். இந்த முட்டைகள் நம்ம வீட்டிற்கு வருபவர்கள், அவர்களின் லக்கேஜ் பொருட்கள், உடைகள், பர்னிச்சர் இவைகள் மூலம் எளிதாக பரவி விடுகின்றன.
இந்த பூச்சிகள் பறக்காது. ஆனால் வீட்டில் உள்ள சுவர்கள்,தரைகள் மூலம் இடம் பெயருகின்றன. இந்த மூட்டை பூச்சிகள் கடிப்பதால் அலற்சி, சரும தடிப்பு போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதை வந்த பிறகு மூட்டை பூச்சி மருந்து அடித்து கொல்வதை விட வருவதற்கு முன்பு சில இயற்கை பொருட்களை கொண்டு தடுப்பது மிகவும் சிறந்த வழி. எனவே இதற்கு பயன்படும் சில இயற்கையான பூச்சி எதிர்ப்பு ஸ்பிரேக்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
கிராம்பு
கிராம்பு ஆயில் ஏற்கனவே பூச்சிகளை எதிர்த்து கொல்லும் சக்தி வாய்ந்தது. இதில் உள்ள அமிலத்தன்மை மற்றும் இதன் அதீத வாசனை பூச்சிகளை விரட்டி அதன் பெருக்கத்தையும் தடுக்கிறது.
பயன்படுத்தும் முறை
1 டேபிள் ஸ்பூன் கிராம்பு எண்ணெய் எடுத்து கொண்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்பொழுது இந்த கலவையை ஒரு ஸ்பிரே பாட்டிலில் அடைத்து பூச்சிகள் பரவியுள்ள இடத்தில் ஸ்பிரே செய்யவும்.
வேப்பெண்ணெய்
வேப்பெண்ணெய் ஓரு கிருமி நாசினியாகும். வேப்பிலையிலிருந்து பெறப்படும் இந்த எண்ணெய் மூட்டை பூச்சிகளை கொல்லும் மருந்தாக செயல்படுகிறது.
பயன்படுத்தும் முறை
1 அவுன்ஸ் வேப்பெண்ணெய்யை எடுத்து கொள்ளவும். அதனுடன் 4 அவுன்ஸ் தண்ணீர் சேர்த்து அதனுடன் 1/2 டீ ஸ்பூன் அளவு சோப்பு எடுத்து கலந்து கொள்ளவும். பிறகு அதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் அடைத்து பூச்சிகள் உள்ள இடங்களான கட்டில், மெத்தை, இடுக்குகள் போன்ற இடங்களில் ஸ்பிரே செய்யும் வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கில் 18-20 நாள் செய்து வந்தால் மூட்டை பூச்சிகள் தொல்லை இருக்காது.
லாவண்டர் எண்ணெய்
லாவண்டர் எண்ணெய்யும் ஒரு சிறந்த பூச்சி விரட்டியாகும். இது மூட்டை பூச்சிகளின் முட்டைகளை அழிப்பதில் மிகவும் சிறந்தது.
பயன்படுத்தும் முறை
50 மில்லி லிட்டர் தண்ணீரில் 10-15 சொட்டுகள் லாவண்டர் எண்ணெய்யை கலந்து கொள்ள வேண்டும்.நன்றாக குலுக்கி விட்டு அதை ஒரு ஸ்பிரே பாட்டிலில் அடைத்து பூச்சிகள் பரவியுள்ள இடத்தில் ஸ்பிரே செய்யவும்.
யூகாப்லிட்டஸ் ஆயில்
பூச்சிகளை விரட்டுவதில் இது மிகவும் பயனுள்ளது. இதுள்ள பூச்சி விரட்டும் பொருட்கள் மற்றும் முட்டைகளை அழிக்கும் தன்மை களைகளை அழித்தல், பூஞ்சை, பூச்சிகள், பாக்டீரியா போன்றவற்றை விரட்டுகிறது.
பயன்படுத்தும் முறை
1.5 அவுன்ஸ் வோட்காவுடன் 2 அவுன்ஸ் தண்ணீர் மற்றும் 30-35 சொட்டுகள் யூகாப்லிட்டஸ் ஆயில் சேர்த்து ஸ்பிரே பாட்டிலில் அடைத்து நன்றாக குலுக்கி கொள்ளவும். இதை பூச்சிகள் உள்ள இடங்களில் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஸ்பிரே செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
ஆரஞ்சு ஆயில்
ஆரஞ்சு ஆயிலில் அடங்கியுள்ள டி – லைமோனோன் ஒரு பூச்சி விரட்டியாக செயல்படுகிறது. இதுலுள்ள பொருட்கள் பூச்சிகளின் நரம்புகளில் நச்சுக்களை விளைவித்து சில விநாடிகளில் அதை கொண்டு விடுகிறது.
பயன்படுத்தும் முறை
1 அவுன்ஸ் கருப்பு நிற வெல்லப்பாகு, 1 கப் கம்போஸ்ட் டீ மற்றும் 2 அவுன்ஸ் ஆரஞ்சு எண்ணெய் இவற்றுடன் 4 லிட்டர் தண்ணீர் சேர்த்து கலந்து ஸ்பிரே பாட்டிலில் அடைத்து கொள்ளவும். இப்பொழுது பூச்சிகள் இருக்கின்ற இடத்தில் ஸ்பிரே செய்யவும்.
தைம் ஆயில்
தைம் ஆயில் ஒரு பூச்சி விரட்டியாக இருப்பதால் எளிதாக மூட்டை பூச்சிகளை விரட்டி விடுகிறது.
பயன்படுத்தும் முறை
சில தைம் இலைகளை எடுத்து ஒரு கவரில் போட்டு பூச்சிகள் இருக்கின்ற இடத்தில் வைத்து விடவும். பிறகு 3 நாட்களுக்கு பிறகு அந்த இலைகளை நீக்கி விட்டு புதிய இலைகளை அதனுள் வைத்து இதே மாதிரி திரும்பவும் செய்யவும். இதன் மூலம் பூச்சித் தொல்லைகள் இல்லாத வீட்டை பெற முடியும்.
டீ ட்ரி ஆயில்
டீ ட்ரி ஆயில் ஒரு சிறந்த பூச்சி விரட்டி. இந்த எண்ணெய் பூச்சிகளின் செல் சுவர்களை தாக்குவதால் இது ஒரு அற்புதமான பூச்சி விரட்டியாகும். குறிப்பாக மூட்டை பூச்சிகளை விரட்டுவதில் இது மிகவும் பயனுள்ளது.
பயன்படுத்தும் முறை
50 மில்லி லிட்டர் தண்ணீரில் 2 டேபிள் ஸ்பூன் டீ ட்ரி ஆயில் கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் அடைத்து கொள்ளவும். பிறகு பூச்சிகள் பரவியுள்ள இடங்களில் ஸ்பிரே பண்ணவும். ஒவ்வொரு முறை அடிக்கும் போதும் பாட்டிலை குலுக்கி கொள்ளுங்கள்.