தேவையானப்பொருட்கள்:
பச்சரிசி – 150 கிராம்,
பாசிப்பருப்பு – 35 கிராம்,
கடலைப்பருப்பு – 25 கிராம்,
தேங்காய்ப் பால் – அரை கப்,
ஏலக்காய்த்தூள், உப்பு – சிறிதளவு,
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து பச்சரிசியுடன் சேர்த்து மாவாக்கவும். இதனுடன் உப்பு, ஏலக்காய்த்தூள், தேங்காய்ப் பால் சேர்த்து (தேவையெனில் சிறிது நீரும் சேர்த்து) பிசையவும். மாவை சூடான எண்ணெயில் முள்ளு முறுக்காக பிழியவும்.
குறிப்பு:
தேங்காய்ப் பால் சேர்ப்பதால் முறுக்கு சிவப்பாக வரும். ஆனால், இதை ருசியில் மிஞ்ச முடியாது.