27.2 C
Chennai
Tuesday, Jan 27, 2026
beauty1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

முகம் மற்றும் உடல் சத்தாக இருக்க வேண்டுமென்றால் இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்!…

காலையில எழுந்துக்கறதே பெரும் போராட்டமாக பலருக்கும் இருக்கும். அந்த வகையில் காலையில் இதை செய் அதை செய் என்று சொன்னால், கொஞ்சம் கடுப்பாக தான் இருக்கும். எனினும், காலையில் செய்கின்ற ஒரு சில விஷயங்கள் தான் நம்மை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்து கொள்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தினமும் காலையில் இதையெல்லாம் செய்தால் உங்களின் முகம் பளபளவென மாறுமாம்..!

காலை நேரத்தில் நாம் செய்ய கூடிய சில அன்றாட செயல்கள் நம்மை முழுவதுமாக மாற்ற கூடிய தன்மை வாய்ந்தவை. அதுவும் இந்த பழக்க வழங்கங்கள் அனைத்துமே உங்களின் முகத்தை பளபளவென மாற்ற கூடியவையாம். இவற்றை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு கிடைக்க கூடிய பலன்கள் ஏராளம். சரி, வாங்க அவை என்னென்ன செயல்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

beauty1

முதல் வேளை..!

காலையில் எழுந்தததும் மொபைல் எங்குள்ளது என தேடாமல், 1 கிளாஸ் தண்ணீரை குடியுங்கள். உங்களின் நாளை இப்படி தொடங்கினால் மனதிற்கும் உடலிற்கும் அதிக ஆற்றல் கிடைக்கும். சீனர்கள் கூட இந்த பழக்கத்தை கடைபிடிப்பதால் தான் இவ்வளவு ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்கின்றனர்.

வைட்டமின் பி

தென்னிந்திய பாரம்பரிய உணவான இட்லி போன்றவற்றை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அத்துடன் வைட்டமின் பி நிறைந்த உணவுகளை எடுத்து கொண்டால் உங்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் முக ஆரோக்கியம் கூடும்.

மசாஜ்

தினமும் 2 நிமிடம் கையை வைத்து முகத்தில் வட்ட வடிவமாக மசாஜ் கொடுங்கள். இது முகத்தில் சீரான ரத்த ஓட்டத்தை தந்து பளபளவென மாற்றும். மேலும், ஐஸ் கட்டிகளை வைத்தும் முகத்தில் ஒத்தடம் கொடுத்தால் நல்ல பலன் விரைவிலே கிடைக்கும்.

வீங்கிய கண்களா..?

கண்கள் அதிக வீக்கத்துடன் காலையில் இருந்தால் அதற்கும் தீர்வு உள்ளது. டீ பேக்குகளை(tea bags) குளிர வைத்த பின்னர் கண் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம். இது கண்களின் வீக்கத்தை குறைத்து அதன் அழுத்தத்தையும் குறைத்து விடும்.

பன்னீர் வைத்தியம்..!

முகத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்து கொள்ள பன்னீரை கொஞ்சம் பஞ்சில் ஊற்றி கொண்டு முகத்தில் தடவலாம். இந்த குறிப்பு உங்களின் வறட்சியான முகத்தை ஈர்ப்பதுடன் வைத்து கொள்ள உதவும். அத்துடன் மினுமினுப்பான சருமமும் உங்களுக்கு கிடைக்கும்.

தேனும் இந்த நீரும்..!

முகம் மற்றும் உடல் சத்தாக இருக்க வேண்டுமென்றால் இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். அதற்கு 1 கிளாஸ் வெது வெதுப்பான நீரில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் போதுமானது. இதை வெறும் வயிற்றில் குடிப்பதால் உங்களின் முகம் அழகாகும். அத்துடன் உடலில் உள்ள அழுக்குகளும் வெளியேறும்.

காலை உணவு முக்கியம்..!

நாம் சாப்பிட கூடிய உணவு வேளையில் காலை உணவு மிகவும் அவசியமானது. காலையில் சாப்பிடாமல் இருந்தால் அன்றைய நாள் முழுவதும் பலவித பாதிப்புகளை உங்களுக்கு தரும். இதே பழக்கம் தொடர்ந்தால் உடல் நிலை முழுவதுமாக சீர்கேடு அடைந்து விடும்.

நோ நோ..!

முகத்தை அழகாக்க வேண்டும் என்பதற்காக கண்ட கிரீம்களையும் முகத்தில் பயன்படுத்தாதீர்கள். இது முகத்தின் அழகை கெடுத்து கருமையை தந்து விடும். கூடுதலாக அலர்ஜி போன்ற பாதிப்புகளும் உங்களுக்கு பரிசாக கிடைக்கும். ஆதலால் இயற்கை பொருட்களை பயன்படுத்துவது சிறந்தது.

Related posts

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…ஹீரோ மாதிரி நீங்க அழகாகவும் நல்ல கவர்ச்சியான சருமத்தை பெறவும் என்ன செய்யணும் தெரியுமா?

nathan

கவர்ச்சியான தோற்றம் வேண்டுமா

nathan

தென்னிந்திய பெண்களின் அழகிற்கான ரகசியங்கள்!!!

nathan

அட கழுத்துல 2 தாலி… முதல் கணவனிடம் சிக்கிய மனைவி

nathan

குளிர்காலம்: சருமத்தை வறட்சியை தடுக்கும் வழிகள்

nathan

தினமும் பீட்ருட் சாறு குடிச்சா… நீங்க எதிர்பாக்காத நன்மை உங்களுக்கு கிடைக்குமாம்..

nathan

அழகு ,கன்னத்தின் அழகு அதிகரிக்க..,BEAUTY INTAMIL

nathan

அவசியம் படியும் அசைவ உணவுகளை இரவில் எடுத்துக் கொள்ளலாமா?.

nathan

சருமத்தை அழகாக்கும் கற்றாழை ஜெல் மாஸ்க்

nathan