28.7 C
Chennai
Saturday, Jul 26, 2025
jdddf
அழகு குறிப்புகள்

சூப்பர் டிப்ஸ் சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும் சர்க்கரை பேஸ் பேக்!!!

அழுக்குகளை அகற்றும் சர்க்கரை பேஸ் பேக்… சர்க்கரை சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி, முகத்தை பளிச்சிட வைக்கும்.

இந்த சர்க்கரை வைத்து ஃபேஸ் பேக்கை எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சருமத்தில் நாள்தோறும் செல்கள் உருவாவது, இறப்பதும் சாதாரண விஷயம். இறந்த செல்களை சருமம் தனது துவாரத்தின் மூலம் வெளியேற்றிவிடும். அந்த துவாரம் முழுவதும் தூசி, அழுக்கு படிந்திருந்தால், இறந்த செல்கள் வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். அதனால் தான் சருமம் கடினமாகி, சொரசொரப்புடன், சீக்கிரம் வயதான தோற்றத்தை பெறும்.

jdddf
இதற்காக முகத்தை தினமும் கழுவி பராமரித்தால், அழுக்குகள் வெளியேறி சுத்தமாகும். விடாப்படியான இறந்த செல்களை ஸ்க்ரப் மூலம் அகற்றலாம். அவை சருமதில் உள்ளே சென்று அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்கும். ஆனால் ஸ்க்ரப் நாம் கடையில் ஏன் வாங்க வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கலாம்.

சாதாரணமாக மஞ்சளும், உப்பும் அழுக்குகளை அகற்றி, முகத்தை பளிச்சிட வைக்கும். சர்க்கரையும் அவைகளுக்கு போட்டியாக சருமத்தை காக்கும். இந்த சர்க்கரை ஃபேஸ் பேக்கை எவ்வாறு செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையானவை: சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், ஆலிவ் ஆயில் – 2 சொட்டு, எலுமிச்சை சாறு – 2 சொட்டு.

எலுமிச்சை சாறு முகத்திலுள்ள கருமையை போக்கும். சர்க்கரை இறந்த செல்களை அகற்றும். ஆலிவ் ஆயில் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து முகத்தை பொலிவாக்கும். ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரையையும், எலுமிச்சை சாறினையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின் அதனை முகத்தில் போட்டு மெதுவாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகம் பளிச்சிடும்.

Related posts

உடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு

nathan

சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்!!

nathan

முகத்தில் உள்ள அழுக்குகள், விரைவில் வெளியேற ஆவி பிடிக்கும் முறை

nathan

கருவளையம் போக்கும் எளிய மசாஜ்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… குட்டை தலை முடியின் அழகு ரகசியம்

nathan

முக அழகை பொலிவாக வைத்து கொள்ள…..

sangika

வருண் அக்ஷராவுக்கு திடீர் திருமணம்?பரவும் புகைப்படம்!

nathan

உதடுகள் சிவப்பாக மாற……..

sangika

கச்சிதமாக இருப்பதே அழகு!

nathan