அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

கழுத்தில் படரும் கருமை

images (13)கத்தை போலவே கழுத்தையும் அக்கரையுடன் பராமரிக்க வேண்டும். சிலருக்கு கழுத்து பகுதி கறுத்து காணப்படும். இந்த கருமையை நீக்க இயற்கை பிளீச்சாக எலுமிச்சை பயன்படுகிறது. தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பு எலுமிச்சை சாறை கழுத்தில் கருமையான பகுதிகளில் தடவி ஊறவிட்டு குளிக்க வேண்டும். இதனால் படிப்படியாக கருமை மறையும்.

இது போல் பால் பவுடர் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதை தேன், எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து பசை போல கலக்கவும். இந்த கலவையை கழுத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி வரவும். வாரம் ஒருமுறை இதுபோல் செய்தால் கழுத்து பளபளக்கும்.

இது போல் தயிர், தக்காளி ஜூஸ் அல்லது மஞ்சள்தூள், கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து பூசலாம். கோதுமை மாவில் வெண்ணெய் கலந்து பூசலாம். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

செம்பருத்தி பூ, ஆவாரம் பூ, மஞ்சள் கரிசலாங்கண்ணி, அவரி இலை போன்றவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் நிறம் கூடும்.
குங்குமப்பூ, வால்மிளகு, லவங்கம், ஓமம், சாம்பிராணி தலா 25 கிராம் எடுத்து பொடிசெய்து வைத்துக் கொள்ளவும். இதில் அரை ஸ்பூன் எடுத்து சில சொட்டு பால் விட்டு கலந்து முகம், கழுத்தில் பூசிவர சிகப்பழகு கூடும்.

Related posts

வேக்சிங் செய்த இடத்தில் ஏற்படும் எரிச்சலைத் தணிக்க உதவும் பொருட்கள்!

nathan

சரும பிரச்சனைகளை தீர்த்து பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள்

nathan

கால்களில் இருக்கும் முடியை அகற்றுவதற்கு இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்!…

sangika

உடல் எடையை குறைக்கனும்னா நீங்க கவனம் கொள்ள வேண்டிய உணவுகள்!

nathan

இதை தினமும் செய்து வந்தால் உங்கள் கன்னங்கள் அழகாக கவர்ச்சியாக காட்சியளிக்கும்.

nathan

சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் குங்குமப்பூ!

nathan

முகம் பொலிவு பெற இந்த எளிய குறிப்புகளை செய்யுங்கள்!…

nathan

குளிர்ச்சி குளியல்

nathan

மனைவியின் முறையற்ற காதலால் நேர்ந்த விபரீதம்..!

nathan