23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
keerai
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

பருவ மாற்றங்களுக்கேற்ப உண்ண வேண்டிய உணவுகள்!..

காலநிலை மாற்றங்களில், உடலின் வளர்ச்சியைத்தூண்டி, வயிற்று பாதிப்புகளை குணமாக்கி, உடல்நலக் கோளாறுகளை சரிசெய்யும், ஆரோக்கியமான ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடுவது அவசியமாகும். அவை கால மாற்றங்களால், உடல்நல பாதிப்புகள் ஏற்படாமல், நம்மை காத்துவரும். நாம் நிச்சயமாக, குளிர்காலத்தில், குளிருக்கு இதமான சூழலில் இருந்திருப்போமே தவிர, உடலைப்பற்றி, அக்கறை கொண்டிருக்க மாட்டோம்.

keerai

பருவ மாற்றம்

குளிரைப்போக்க சூடான மசாலா உணவுகளை, எல்லோரையும்போல நாடும்போது, வயிறுவீக்கம், நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுக்கோளாறால், அடிக்கடி பாத்ரூமுக்கு ஒடத் தூண்டியிருக்கும். நாம் குளிர்காலத்தில் விரும்பி சாப்பிட்ட, உடலுக்கு மதமதப்பைத்தந்த கலோரிகள் தீராத உணவின் பாதிப்பிலிருந்து, வசந்தகாலம் புத்துணர்வையடைய, சாப்பிட்ட உணவுகளை, வெளியேற்ற, ஒரு ரீசெட் பட்டன், உடலில் இருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்?

வசந்த கால தொடக்கம்

உடல்நலம் பாதித்தவர்களுக்கு, ரீசெட் பட்டன் தேவையில்லை, அத்துடன், தொளதொளப்பான, வேர்வையைஉறிஞ்சும் சட்டையையும் கழற்ற வேண்டியதில்லை. மடத்தனமான, உணவுக் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்கவேண்டியதில்லை.

வசந்தகாலத்தை வரவேற்க, உடலை தயாராக்க, சரியான உணவுகளை சாப்பிடுவதன்மூலம், உடலின் வளர்ச்சி மாற்றம் விரைவாகும். இதன் மூலம், வயிறு சுத்தமாகி, செரிமான பாதிப்புகள் விலகி, ஆற்றல் மீண்டும், இயல்பாகிவிடும்.

நிபுணர்களால், பரிந்துரைக்கப்பட்ட, பதினைந்துவகை சரியான உணவுகளை அறிந்துகொள்ளலாமா?

பச்சைக்கீரைகள்

பசலைக்கீரை, லெட்டியூஸ் கீரை, கேல், அறுகுலா, பிரசல்ஸ் ஸ்ப்ரோட்ஸ் போன்ற கரும்பச்சைக் கீரைகள், மேலைநாட்டு வெஜ் சாலட்களில் அதிகம் இடம்பெறுகின்றன. நோயெதிர்தன்மை கொண்ட இவை, உடலின் நச்சுக்களை வெளியேற்றி, நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும், உடலணுக்களின் எதிர்மறை செயல்பாட்டை, தடுக்கக்கூடியவை. கரும்பச்சை இலைகளை உணவில் சேர்க்கும்போது, அவற்றிலுள்ள வைட்டமின் C, பீட்டா கரோடின் போன்றவை, பனிக்காற்றால் பாதித்திருந்த தோல் செல்களும், தலை முடியும் மீண்டும், புத்துயிர்பெற உதவுகின்றன.

மேலும், வைட்டமின் C, உடலின் அழகிய சருமத்துக்கும், மூட்டு இணைப்புகளின் சதைப்பற்றுக்கும், காரணமான கொலாஜன்கள், அதிகமாக உற்பத்தியாகக் காரணமாகிறது.

பூண்டு.

நாம் உணவில் பாரம்பரியமாக சேர்த்துவரும் பூண்டு, கல்லீரல் நச்சுக்களை அழித்து, கல்லீரல் திசுக்களை பாதுகாத்து, உடலை இயற்கையாகத் தூய்மைசெய்யும், டெபோரா மல்கோப் கொஹேன் எனும் அமெரிக்க ஊட்டச்சத்து நிபுணர், பூண்டு, சிறந்த நுண்ணுயிர்க்கிருமி எதிர்ப்பு மட்டுமல்ல, பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் கிருமி மற்றும் ஒட்டுண்ணிவகை நச்சுக்களையும் எதிர்க்கும் ஆற்றல்மிக்கது, என்கிறார்.

பூண்டிலுள்ள வைட்டமின் C, உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தி, கல்லீரலின், சீரானஇயக்கத்துக்கு, உறுதுணை புரிகிறது.

சீரகம்

குளிர்காலத்தில், தொண்டைக்கு இதமான, இலேசாக உப்புகரிக்கும் சூப்பைக் குடித்தால், சிலருக்கு வயிறுவீங்கி, வயிறு நிரம்பியதைப்போல, இருக்கும். பசி எடுக்காது, இதை, ஜீரகம் சரிசெய்யும்.

ஜீரகமும், அதன் இலைத்தண்டுகளும், பெருங்குடலின் வீக்கத்தையும், வாயுவையும் சரியாக்கி, குடல்தசைகளை சரியாக இயங்கவைக்கும் என்கிறார், நியூயார்க் நகர ஊட்டச்சத்து நிபுணர், சிட்னி க்ரீன். சாலட்டில் சிலதுளி எலுமிச்சைசாறும், சிறிது சீரகத்தையும்தூவி சாப்பிட, வயிறுவீக்கம் தணியும். சிட்ரஸ் பழங்களிலுள்ள வைட்டமின் C, உடலில் நீர்வற்றுவதைத் தடுத்து, உடல் அழற்சிகளைப்போக்கும்.

ஆளி விதைகளின் அற்புதங்கள்.

ஒரு மேசைக்கரண்டி ஆளிவிதைகளில், 1.8 கிராம் அளவுள்ள, உடலுக்கு நன்மைகள் தரக்கூடிய, ஒமேகா 3 சத்து உள்ளது. இது உடலின் தசை அழற்சிகளை எதிர்த்துப்போராடும் முக்கிய கொழுப்புஅமிலமாகும் என்கிறார், மல்கோப் கொஹென். ஆளிவிதைகளில் உள்ள கரையும் மற்றும் கரையாதவகை நார்ச்சத்துக்கள், கொலஸ்ட்ரால் குறைப்புக்கு காரணமாகின்றன. மேலும், மலச்சிக்கல் ஏற்படாமல், நச்சுக்களை சேர்த்து, உடலிலிருந்து வெளித்தள்ளுவதில், துணைசெய்கின்றன. இரத்தசர்க்கரை அளவுகளை சீராக்கி, பசியின்மையைப்போக்குகிறது. உணவுகளை மிருதுவாக்க, சாலட், ஓட்ஸ், இட்லி, தோசைமாவில், ஆளிவிதைகளை, சேர்த்து சாப்பிட்டுவர, கொழுப்புகள் கரைந்து, உடல்மெலியும்.

பிரசல்ஸ் ஸ்ப்ரோட்ஸ்

பச்சைபூக்கோஸ் அல்லது கலகோஸ் என அழைக்கப்படும், பிரசல்ஸ் ஸ்ப்ரோட்ஸ், ஒட்டிய வயிறை விரும்புபவர்களுக்கு, உற்ற துணைவன். ஒருகப்பில், ஒருநாளைக்குத்தேவையான வைட்டமின் C மற்றும் மூன்றுசதவீதம் நார்ச்சத்தும், குறைந்த கலோரியும் நிரம்பியுள்ளது, என்கிறார், எட்வினா கிளார்க் எனும் தலைமை ஊட்டச்சத்து நிபுணர். சல்பர் நிரம்பிய தன்மைகளால், உடல் அழற்சிகளை குறைத்து, புற்றுநோய்க்கு காரணமாகும், உடல் திசுக்களை செயலிழக்கவைக்கும் ஆற்றல் மிக்கது, பிரசல்ஸ் ஸ்ப்ரோட்ஸ்.

பார்லி.

ஸ்வீடனில் நடந்த சமீபத்திய ஆய்வுகள், பார்லி, இரத்தசர்க்கரை அளவு மற்றும் பசியின்மையைப்போக்கும் தன்மையுடையது என்கிறது. தொடர்ந்து மூன்றுநாட்கள், தினமும் மூன்றுவேளை, பார்லிமாவினால் செய்யப்பட்ட ரொட்டியை ஒருவர் சாப்பிட்டுவர, உடலில் சீரணஹார்மோன்கள் வலுவாகி, உடல் வளர்ச்சிமாற்றங்கள் சீராகி, பசியின்மை நீங்கியிருக்கிறது. உடலில் அதிகரித்த ஹார்மோன்கள், உடல் அழற்சியைப்போக்கியிருக்கிறது. பார்லியில் உள்ள நார்ச்சத்து, குடலில் உள்ள நலம்தரும் பாக்டீரியாக்களை தூண்டி, முக்கியஹார்மோன் உற்பத்தியைதடுத்து, உடல் வளர்ச்சிமாற்றத்தை, கிட்டத்தட்ட பதினான்கு மணிநேரம், நீடிக்கவைக்கிறது.

அஸ்பேரகஸ் எனும் தண்ணீர் விட்டான் கிழங்கு.

சுவையான இந்த பச்சைநிறத்தண்டில் நிரம்பியிருக்கும், குளுடாதைன் உடலிலுள்ள நச்சுக்களை சேர்த்து, வெளியேற்ற, உதவுகிறது. அதிலுள்ள பிரி பயோடிக் நார், வயிற்றிலுள்ள நலம்தரும் பாக்டீரியா வளர,உதவுகிறது. நலம்தரும் பாக்டீரியாக்கள், ஆரோக்கியமான உடல் எடைப்பராமரிப்பிலும், ஊட்டச்சத்தை அடையவும், பயனாகும் என்கிறார், உடல் ஆரோக்கிய ஆலோசகர் லிசா பூத். இதிலுள்ள அஸ்பாரகஜின் எனும் இயற்கையான அமினோஅமிலம், அதிகமுள்ள உடல்உப்பை வெளியேற்றி, உடல் நீர்ச்சத்தை, நிலைநிறுத்தும்.

பிராக்கோலி

க்ரூசிபெரஸ் காய்கறிகள் எனும் முட்டைக்கோஸ் குடும்பகாய்களில், பிராக்கோலி, ஆற்றல்மிக்கதாகும். கல்லீரலைக்காக்கும், காய்கறிகளில், சிறந்தது. உடலின் நச்சு வெளியேற்றத்தில், சிறப்பாகசெயலாற்றும். இதன் சத்துக்கள் மற்றும் நார், குடல்திசுக்களை காத்து, உடல்வேதி நச்சுக்களை வெளியேற்றும். புற்று வியாதியிலிருந்து காக்கும். ஆயினும், அதிகமாக சாப்பிட்டால் இதிலுள்ள ரபினோஸ் எனும் சர்க்கரைசத்து, குடல் பாக்டீரியாவை பாதித்து, வீக்கம் மற்றும் வயிற்றில் வாயுவை உண்டாக்கும். முறையாக சமைத்து உணவில் சேர்ப்பதன்மூலம், பாதிப்பை தவிர்க்கலாம்.

முட்டை.

முட்டை, அதிகபுரதம் நிறைந்த ஒன்றாகும். முட்டை, உடல் எளிதில் செறிக்கக்கூடிய உணவுமாகும். முட்டையிலுள்ள அத்தியாவசிய அமினோஅமிலங்கள், திசுக்களின் தன்மையை சரியாக்கும். இதன் ஆர்கனோசல்பர் மூலப்பொருள், உடலிலுள்ள தனித்திசுக்களை எதிர்த்து அவற்றின் நச்சுத்தன்மைகளைக்குறைக்கும்.

பீட்ரூட்

பீட்ரூட்டின் நோயெதிர்ப்புதன்மைகள், கல்லீரலின் கழிவுநீக்கத்தில், பெருந்துணையாகின்றன, இதன் நார்ச்சத்தும், வைட்டமின் Cயும், செரிமானத்தில், தூய்மைப்பணியில் உதவுகின்றன.

தயிர்

உடலுக்கு நன்மைதரும் குடல்பாக்டீரியாக்கள், உடலியக்கத்தை, சீராக வைப்பதில் பெரும்பங்கு வகிப்பதாக, ஆய்வுகள் கூறுகின்றன. உடலின் நல்லபாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு, தயிர் துணை புரிகிறது. கேன்களிலுள்ள தயிர், சுத்தமான பாக்டீரியாக்களால் உருவாக்கப்பட்டிருப்பதை, தயிரில், லாட்டோபாசில்லஸ் அசிடோபிலஸ் வகை இருப்பை சோதித்து, குடிக்கலாம். வாழைப்பழம் மற்றும் பெர்ரிப்பழங்களும் துணைபுரியும்.

குடை மிளகாய்

பல வண்ணங்களில் இருந்தாலும், குடைமிளகாய் குறைந்த கலோரி மற்றும் நிறைந்த நோயெதிர்ப்புதன்மையால், உடல்அழற்சிகளை நீக்கும். இதன் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும், சிறுகுடலின் கழிவுகளை, சீராக்கும். உடல்சூட்டை அதிகரிக்கும் உடலியக்கங்களின் மூலம், கலோரிகளை எரித்து, உடல் வளர்ச்சிமாற்றத்தை அதிகரிக்கும்.

மாதுளை

அரைகப் மாதுளை முத்துக்களில், மூன்றரை கிராம் நார்ச்சத்து இருப்பதால், செரிமான ஆற்றல் மற்றும் சுவையில் திருப்தியை தருகிறது. இதிலுள்ள நோயெதிர்ப்புமிக்க பாலிபீனால் தாதுக்கள், உடலின் தேவையற்ற திசுக்களால் ஏற்படும் பாதிப்பைப்போக்கி, உடல் அழற்சியை தடுக்கிறது.

கெபிர்

நன்மைதரும் பாக்டீரியாவால் உருவாகும் கெபிர், தயிரைப்போன்றே, புளிப்பானது. உடலின் நோயெதிர்ப்பாற்றல், மூளைசெயல்பாடு மற்றும் எடைக்குறைப்பிலும், செரிமானத்திலும் சிறப்பாக செயல்படுகிறது. பலவளர்நிலை பாக்டீரியாக்களைக் கொண்ட கெபிரில், லாக்டோஸ் இல்லை.

தண்ணீர்

உடல்சோர்வுக்கு காரணமான, நீர்ச்சத்து குறைபாட்டை, உடலாற்றலை மேம்படுத்தி, வளர்ச்சி மாற்றத்தை சீராக்கும் ஆற்றல், தண்ணீருக்கு உண்டென்கிறார், லாரன் கெல்லி எனும் உணவுநிபுணர். எலுமிச்சைசாறு கலந்த வெதுவெதுப்பான நீரைக்காலையில் பருக, உடலில் பலநன்மைகள் நிகழும். சுடுநீர், குடலை வலுவாக்குவதால், மலச்சிக்கல் நீங்கும். எலுமிச்சைசாறிலுள்ள சிட்ரிக்அமிலம், உடல்நச்சு நீக்கத்தில்,துணையாகும். தொப்பையைக்கரைத்து, வயிறை ஒட்டவைக்கும் ஆற்றல், தண்ணீருக்கு உண்டு. .

Related posts

வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் எள்ளு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

nathan

நீரிழிவு நோயாளிகள் வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிடலாமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

நெத்திலி கருவாட்டு தொக்கு

nathan

கண்களை திறந்து செய்யும் தியானம்!….

nathan

உளுந்தங்கஞ்சி

nathan

குளிர்காலத்தில் சூடாக இருக்க உதவும் உணவுகள்!

nathan

அன்றாடம் பருப்பு சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் பாருங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா? மனைவியின் பாதம் வைத்து கணவனின் தலைவிதியை சொல்லமுடியும்!

nathan

உங்களுக்கு பிடித்த இந்திய பாரம்பரிய உணவுகளின் ஆரோக்கிய நன்மைகள்!!!

nathan