பலருக்கும் அத்திப்பழம் பற்றி தெரியாது. ஏன் பாத்திருக்கக்கூடமாட்டார்கள். அப்படியே பார்த்தாலும், இதை எப்படி சாப்பிடுவது என்று பலரும் கேட்பார்கள். ஏனெனில் அத்திப்பழம் பார்ப்பதற்கு அப்படி இருக்கும். மேலும் இந்த அத்திப்பழம் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஆனால் இதன் மறுவடிவமான உலர்ந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்கும்.
பலரும் கடைகளில் முந்திரி, உலர் திராட்சை, பிஸ்தா உள்ள இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதன் வடிவத்தைப் பார்த்து, இது எப்படி இருக்குமோ என்று நினைத்து வாங்கி சுவைத்திருக்கமாட்டீர்கள். இனிமேல் கடைக்கு சென்றால், தவறாமல் இந்த உலர்ந்த அத்திப்பழத்தை வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் மற்ற உலர் பழங்களை விட, இதில் அலாதியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சரி, இப்போது அந்த உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
அத்திப் பழத்தை அடிக்கடி உண்டுவர இதயம் பலமாகும்.இரத்தம் விருத்தியடையும். நோய் எதிர்ப்பு திறன் கூடும்.
அத்திப்பழம் அஜீரணத்தை குணப்படுத்தும்.
அத்திப் பிஞ்சை சமைத்து உண்டால் . ரத்த மூலம் மற்றும் வயிற்றுப்போக்கு தீரும்.
உலர் அத்திக் காயைப் பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் சீரடையும்.
அத்தி விதைத்தூளை நீர் கலந்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.
அத்திப் பாலுடன் வெண்ணைய், சக்கரை கலந்து நான்கு மணிக்கொரு முறை ஒரு கரண்டி சாப்பிட்டால் சிறுநீரில் இரத்தம் போவது நிற்கும்.இரத்தபேதி மாறும்.வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்.
பட்டையை உரித்து நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி தினசரி காலை குடித்து வர நீரிழிவு மாறும்.
பட்டையை பிழிந்து சாறு எடுத்து மோருடன் கலந்து அரைக் கப் வீதம் இரு முறை குடிக்க பெரும்பாடு, வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.
பட்டையைப் பொடியாக்கி பாலில் கலந்து சக்கரை சேர்த்து அருந்த வாய்ப்புண்,தொண்டைப்புண் குணமாகும்.
பட்டையை ஊறவைத்க நீரால் ஆறாத புண்ணைக் கழுவிவர புண்கள் ஆரும்.
உடம்பில் வீக்கம், வ6ாதவலி உள்ள இடத்தில் அத்திப்பாலை தடவி வர, மூட்டுவலி மாறும்.