கணினி காலத்தில் வாழ்கின்ற நாம் அனைவருமே எதோ ஒரு விதத்தில் அதனாலே பாதிப்பையும் சந்தித்து வருகிறோம். நாகரீகம் என்பது அவசியமானது தான். ஆனால், அவை நம்மை பாதித்து பலவித மோசமான விளைவுகளை ஏற்படுத்தினால் நிச்சயம் அவற்றை தவிர்த்தே ஆக வேண்டும்.
ஃபேஷன் என்ற பேருல நீங்க பண்ற இதெல்லாம், உங்களுக்கு அபாயத்தை தருமாம்..!
ஃபேஷன் என்பது நல்ல மாற்றம் தான். அதுவே உங்களை அபாயகர நிலைக்கு கொண்டு சென்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்..? மிக மோசமான ஃபேஷன் முறைகள் எப்படி உங்களை பாதிக்கிறது என்பதை இனி தெரிந்து கொள்வோம்.
கட்டாயத்திற்கு உட்பட்டதா..?
நம்மில் பலருக்கு ஃபேஷனாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகம் இருக்கும். ஆனால் ஒரு சிலர், ஃபேஷன் என்றாலே எரிந்து விழுவார்கள். காரணம் அந்த அளவிற்கு அதனை வெறுப்பதே.
மேலும் சில மனிதர்கள் மற்றவர்கள் ஃபேஷனாக இருக்கின்றனர் என்பதற்காகவே தானும் அப்படி இருக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் தள்ளப்பட்டவர்களே..!
உள்ளாடை
உள்ளாடை விளம்பரமே மற்ற விளம்பரத்தை விட அதிக கவர்ச்சியாக காட்டப்படுகிறது. நாமும் இவை இவ்வளவு அழகாக இருக்கிறதே என வாங்கி அணிந்து கொள்கிறோம்.
ஆனால், இறுக்கமான உள்ளாடைகள் பல வித தொற்று நோய்களை உங்களுக்கு உண்டாக்கும். மேலும், பிறப்புறுப்பில் எரிச்சல், கிருமிகள் சேருதல், காற்று புகாத தன்மை ஆகியவையும் ஏற்படும்.
ஜீன்ஸ் என்னும் அபாயம்..!
நாம் விரும்பி அணியும் ஜீன்ஸில் எவ்வளவு ஆபத்துகள் உள்ளது என உங்களுக்கு தெரியாது. குறிப்பாக ஆண்கள் ஜீன்ஸ் அணிவதால் விந்தணு குறைப்பாடு, மலட்டு தன்மை போன்ற கோளாறுகள் ஏற்படும். மேலும், ஆணுறுப்பும் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளது.
பிரா
பெண்கள் அணியும் பிரா போன்ற உள்ளாடைகளை சரியான அளவில் தேர்வு செய்ய வேண்டும். இல்லையெனில் தண்டு வடம் பாதித்தல், தோள்ப்பட்டை, முதுகு போன்றவை பெரிதும் பாதிப்படையும்.
மேலும், அதிலுள்ள ஸ்ட்ராப்கள் இருப்பில் இல்லாதவாறு பார்த்து கொள்ளுங்கள்.. ஏனெனில் அவை உங்களுக்கு தோல் வியாதிகளை ஏற்படுத்த கூடும்.
தட்டையான செருப்புகள்
நீங்கள் அணியும் இந்த தட்டையான செருப்புகள் உங்களுக்கு நல்லதல்ல என ஆராய்ச்சிகள் சொல்கிறது. இவை பாதங்களையும், அதன் தசைகளையும், பாதித்து அதிக வலியை தரும். மேலும், இது போன்ற செருப்புகள் தோல் புற்றுநோயையும் உண்டாகுமாம்.
ஷேப்வேர்
பெரும்பாலும் இதனை பெண்கள் தான் அணிவார்கள். பார்ப்பதற்கு படு கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இதனை பயன்படுத்துபவர்கள் பலர்.
ஆனால், இந்த ஷேப்வேர் தொடை தசைகளில் ரத்த ஓட்டத்தை பாதித்து, தசை வலி, இறுகிய நிலையை ஏற்படுத்தும்.
டை
அலுவலகத்திற்கு செல்லும் பலர் இந்த டைகளை கட்டுவார்கள். பெரும்பாலும், இவை நமது கழுத்திற்கு கீழ் பகுதியில் உள்ள ரத்த ஓட்டத்தை பாதிக்க செய்யும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அத்துடன் தலை வலி, தசை அழுத்தம் போன்ற பிரச்சினைகளும் இதனால் ஏற்ப்படுமாம்.
நீச்சல் உடைகள்
பொதுவாக நீச்சலடிக்க செல்லும் முன் பிகினி என்கிற நீச்சல் உடலையையே பெரும்பாலும் அணிவார்கள்.
ஆனால், இது போன்ற உடைகள் புற ஊதா கதிர்களை நம்மீது அதிக அளவு படும்படி செய்கிறது. இதனால் புற்றுநோய் வரைவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளன.