கைகளை சுத்தமாக வைப்பதனால் நோய் தொற்றுகள் தாக்காமல் உடலை ஆரோக்கியத்தோடு பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. ஆனால் எப்படி கைகளை சுத்தமாக வைத்து கொள்வது?
நம்மில் பல பேர் கைகளை சுத்தமாக வைத்து கொள்ள மறந்து விடுகிறோம். சுத்தம் சோறு போடும் என்ற பழமொழியை மட்டும் சொல்லும் பலர் அன்றாடம் அதனை பின்பற்றமாட்டார்கள்.
பழமொழி கூறுவதற்கு நன்றாக இருக்கும், பின்பற்ற கடினமாகத்தான் இருக்கும், சொல்வது சரிதானே!
சுத்தமாக இருக்க வேண்டும் என்று பலரும் சொல்லி கொண்டுதான் இருப்பர். ஆனால் உண்மையில் எவரும் சுத்தமாக இல்லை.
கைகளை சுத்தமாக இருந்தாலே பெரும்பாலான நோய்கள் அண்டுவதற்கு வாய்ப்பில்லை.
கைகளை சுத்தமாக வைத்து கொண்டால் தான் நோய் தொற்றுகள் நம் உடல்களை அண்டாமல் இருக்கும். ஆம், சாப்பிடுவதற்கு முன்பு கைகளை 20 நொடிகளாவது நன்கு சோப்பு கொண்டு கழுவ வேண்டும்.
எப்படி கைகளை சுத்தம் செய்வது?
சோப்பினை கொண்டு விரல் இடுக்குகளில் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இடது கட்டை விரல்களை கொண்டு வலது கைகளையும், வலது கட்டை விரலை வைத்து இடது கைகளையும் நன்கு கழுவவும்.
ஏனெனில் விரல்களின் இடுக்குகளில் தான் கிருமிகள் படிந்திருக்கும்.
அந்த கிருமியினால் வரக்கூடிய நோய் உடலின் ஆரோக்கியத்தை பாதிப்புக்குள்ளாக்கிவிடும். கைகளை கழுவிய பிறகு ஈரப்பதத்தோடு அப்படியே விட்டுவிடக் கூடாது. மிதமான துணியை கொண்டு துடைத்து கொள்ள வேண்டும்.
மூன்று முறைக்கு மேல் பயன்படுத்தப்படும் டவலை மீண்டும் பயன்படுத்தப்படக் கூடாது. அதே போல் அடுத்தவர்களின் டவல்களையும் உபயோகப்படுத்தக் கூடாது.
மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பினால், குப்பைகளை கொட்டிவிட்ட பிறகு, காயங்களுக்கு மருந்து போடுவதற்கும் முன்பும் அதன் பிறகும், கழிவறையை பயன்படுத்திய பிறகு, செல்ல பிராணிகளுடன் விளையாடினால் அதன் பிறகு, அசைவ உணவு சாப்பிட்ட பிறகு இந்த சமையங்களில் கைகளை சுத்தம் செய்வதற்கு மறந்துவிட வேண்டாம்.