30.9 C
Chennai
Monday, May 19, 2025
turmeric
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும் என்பதை பார்க்கலாம்…..

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதுப்போன்று சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே இப்போது மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும் என்பதை பார்க்கலாம்..
முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த, பின் கழுவ வேண்டும்.

சருமத்தில் ஏற்படும் அரிப்பு தேமல் போன்றவற்றிற்கு மஞ்சளுடன் வேப்பிலை கொழுந்து சேர்த்து அரைத்துப் பூசி வந்தால் சருமத்தில் உள்ள நோய்கள் குணமாகும்.

turmeric

மஞ்சள் தூளில் கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப் செய்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால், பருக்கள் படிப்படியாக மறைவதை காணலாம்.

மஞ்சள் தூளில், வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

சருமம் சுருக்கங்களுடன் காணப்பட்டால், மஞ்சள் தூளில் கரும்புச்சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் சரிசெய்யலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள். மஞ்சள் தூளில் மோர் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

குதிகால் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் 3 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

Related posts

எ‌ண்ணெ‌‌ய் வை‌த்‌திய‌ம்

nathan

எந்த வகை சருமத்தினர் எலுமிச்சையை எந்த முறையில் பயன்படுத்தலாம்

nathan

கவலை வேண்டாம்.! சுகர் பிரச்சனையை சமாளிக்க முடியலையா?

nathan

என்றும் இளமையாக தோற்றமளிக்க வேண்டுமா?

nathan

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகிறது தெரியுமா?

nathan

குளிர்காலத்தில் சருமத்தை பராமரிக்க வழிகள்

nathan

இதை நீங்களே பாருங்க.! அழகு தமிழில் பின்னியெடுக்கும் வெள்ளைக்கார தாத்தா!

nathan

முட்டைகோஸ் பேஷியல்(home facial)

nathan

முடியை நேராக்கிய பின்பு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள்!…

sangika